இரட்டை சகோதரிகள் 'மனிகே மாகே ஹிதே' பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இலங்கை பாடகர் யோஹானி திலோகா டி சில்வா பல மாதங்களுக்கு முன்னர் தனது
‘மனிகே மாகே ஹிதே’ பாடலை யூடியூப்பில் பதிவேற்றினார். ஆனால், இந்தப் பாடலின் மீதுள்ள மோகம் இன்னும் ரசிகர்களுக்கு குறையவில்லை. தற்போது, குஜராத் மாநிலம்அகமதாபாத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஸ்ரீ நானாவதி மற்றும் ஸ்ரேயா நானாவதி ஆகியோர் மனிகே மேக் ஹிதே பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, சினிமா பிரபலங்கள் முதல் செல்வாக்கு உள்ளவர்கள் வரை அனைவரும் சிங்களப் பாடலின் மயக்கத்தில் தத்தளித்து வருகின்றனர். இரட்டை சகோதரிகள் நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் நேற்று பகிர்ந்துள்ளனர். இதுவரை இந்த வீடியோ 2 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
தற்போது வைரலாகும் வீடியோவில், இரட்டை சகோதரிகள் மனிகே மாகே ஹிதேவுக்கு அழகாக நடனமாடுவதை காணலாம். ஸ்ரீ நானாவதி மற்றும் ஸ்ரேயா நானாவதி ஒரே நகரத்தில் தங்கவில்லை என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததாகவும் தெரிகிறது. அனைவரையும் கவர்ந்த ஒரு பாடலுக்கு நடனமாடுவதை விட, மீண்டும் இணைவதைக் கொண்டாட சிறந்த வழி எதுவாக இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் கூறினார்கள்
மனிகே மாகே ஹிதே பாடலை முதலில் பாடியவர் சதீஷன் ரத்நாயக்க. யோஹானி திலோகா டி சில்வா தனது பாடலை யூடியூப்பில் பகிர்ந்ததை அடுத்து இந்தப் பாடல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்