1.மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு...


எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜ மழையை இசை மழையால்
நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்துக்கே
குடை கொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான் வரை கேட்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே ஏ...


1984ல் வெளியான உனக்குள் ஒருவன் படத்தில் இளையராஜா இசையில் கமல் நடித்த படம். 



 


2.ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா...


குளம் காட்டும்
வெண்ணிலவாய் அழகான
நம் குடும்பம் கல் ஒன்று
விழுவதால் கலையலாமா

கல் ஒன்று
விழுவதினால் தண்ணீரில்
நெளி நெளியாய் அலைபோடும்
ஓவியத்தை ரசிக்கலாமே

சித்தன வாசல்
சிற்பங்கள் பக்கம் வெறும்
பாறை ஏனோ
அன்பென்னும் உளி
பட்டதால் பாறை சிலை
ஆகுமே


ஏஆர் ரஹ்மான் இசையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மழையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாடல்!



3.தகிட ததிமி தகிட ததிமி..


உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயனம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது
முடியும்


உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயனம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது
முடியும்


மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ


மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ
தெரியும் தெரிந்தும் மனமே லலாலலா


தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை...


சலங்கை ஒலி படத்தில் இளையராஜா இசையில் கமல் நடித்த படம், பல மொழிகளில் ஹிட் அடித்த திரைப்படம்!



4.அந்தி மழை மேகம்...


கை வணங்கும் தெய்வம் ஒன்று
நேரில் வந்தது
தனக்க தீம்

பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்

வீடுதோரம் மங்களம்
இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில்
இன்பம் வந்தது

தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்


நாயகன் படத்தில் இசைஞானி இசையில் மணிரெத்னம் இயக்கத்தில் கமல் நடித்த பாடல்!


 



5.வான்... மேகம்... பூ பூவாய் தூவும்!


வானிலே வானிலே
நீரின் தோரணங்களோ ஹோ
என் மனம் பொங்குதே என்ன
காரணங்களோ

அவன் விழி
அசைந்த‌தில் இவள்
மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ


சாலை எங்கும்
இங்கே சங்கீத மேடையானதோ
ஆடை பாடுதோ தூரல்
போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்


 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண