நித்யானந்தா இருக்கிறாரா? இல்லையா? என்கிற சர்ச்சை, கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி, ஜூலை துவக்கம் வரை வந்துவிட்டது. அவ்வப்போது தன் எழுத்துக்களாலும், பதிவுகளாலும் தான் இருப்பதாக கூறி வந்த நித்யானந்தா, அவ்வப்போது, சமாதியில் இருப்பதாகவும் தெரிவித்து, குழப்பி வந்தார்.


பூஜை புனஸ்காரங்களோடு இருந்த கைலாசா, நித்தியின் நித்திய பூஜைகள் இல்லாமல் வெறிச்சோடிப் போனது. அத்தனைக்கும் தனது உடல்நிலை தான் காரணம் என நித்யானந்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், தனக்கு எதுவுமில்லை, தன்னை நெருங்க இங்கு எதுவுமில்லை என, வழக்கமான தனது பஞ்ச் டயலாக்குகளை மட்டும் நித்யானந்தா கூறியதாக, அவரது சீடர்கள் கூறி வந்தனர். 





உணவில்லை, உறக்கமில்லை என்று இருந்த நித்யானந்தா, புதிய உலகில் வாழ்வதாக உணர்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதெல்லாம் ஒருபுறமிருக்க, கைலாசா, சீடர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்ததாகவும், பல இடங்களில் நித்யானந்தா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடந்ததாகவும், இதனால் நித்யானந்தா, நிரந்தர துகில் கொண்டார் என்றும் பரவலாக பேசப்பட்டது. 


இந்நிலையில் தான், திடீரென கைலாசாவில் இருந்து ஒரு தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 13 அன்று குருபூர்ணிமா தினத்தில் சிறப்பு தரிசனம் தருகிறார் நித்யானந்தா என்பது தான், அது. கடந்த இரு மாதங்களாக தன் முகத்தை காட்டாமல், அணிகலன்கள் இல்லாமல், முடங்கிப் போயிருந்த நித்யானந்தா, இன்று இரவு இந்திய நேரப்படி, 8 மணிக்கு நேரலையில் தோன்றி, தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கப்போகிறார். 






இந்த இரண்டு மாதத்தில் தனக்கு என்ன நடந்தது? ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பதை தனது ஆசி உரையின் நடுவே, வெளியிடவிருக்கிறார் நித்யானந்தா. இதுவரை இல்லாத மருத்துவ ரீதியான விளக்கங்களும், தன்னைப்பற்றிய விமர்சனங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இன்று இரவு தெளிவாக நித்யானந்தா விளக்கவிருக்கும் நிலையில், அவரது பக்தர்கள் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


உலகளாவிய பக்தர்களை கொண்டிருக்கும் நித்யானந்தா, தனக்கு நேர்த்தவற்றை அவரே கூறப்போவதாக கூறியிருப்பது, பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என்றே தெரிகிறது. 


மேலும் படிக்க :


Guru Poornima 2022 : இன்று குரு பூர்ணிமா.. எதையெல்லாம் செய்து வழிபடுவது சிறப்பு?