மாடலிங் துறையில் மிகுதியான ஆர்வம் கொண்ட கொல்கத்தாவை சேர்ந்த ஒரு இளைஞனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் கதிர். 1996ம் ஆண்டு 'காதல் தேசம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சாக்லேட் பாய் தோற்றம் கொண்ட நடிகர் தான் அப்பாஸ். படமும் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே ஏராளமான ரசிககைகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட கியூட் நடிகர் அப்பாஸுக்கு அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பட வாய்ப்புகள் குவிந்தன. 


 



முன்னணி நடிகர் :
 
சுத்தமாக தமிழ் தெரியாத அப்பாஸுக்கு  டப்பிங் பேசியவர் நடிகர் விக்ரம். அந்த வாய்ஸ் அப்பாஸுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ், ஹேர்ஸ்டைல் என அப்பாஸ் ஒரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக இருந்தவர். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த அப்பாஸ் ரஜினிகாந்துடன் படையப்பா, கமல்ஹாசனுடன் பம்மல்.கே. சம்பந்தம், ஹேராம், மாதவனுடன் மின்னலே, அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பிரபுதேவாவுடன் வி.ஐ.பி, சிம்ரனுடன் பூச்சூடவா, மம்மூட்டியுடன் ஆனந்தம்  என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அப்பாஸ் இதுவரையில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.   


அப்பாஸுக்கு அறுவை சிகிச்சை :


ஒரு கட்டத்திற்கு பிறகு படங்களில் வாய்ப்புகள் குறையவே குடும்ப பிசினஸ் மீது கவனம் செலுத்தி வந்தார். அதற்கு பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். அவர் சினிமாவில் கடைசியாக 'பச்சகல்லம்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காலில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றதை பற்றியும் ரசிகர்களின் பிராத்தனைகளுக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். 


 



வெளிநாட்டில் செட்டிலான நடிகர் :


தற்போது அப்பாஸ் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அப்பாஸ்,  குழந்தைகள் மத்தியில் எழும் தற்கொலை உணர்வை எப்படி தடுப்பது  குறித்த விழிப்புணர்வு பற்றின சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்று படித்தார். அவரின் மனைவியும் ஒரு பிரபலமான திருமண ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர். 


நியூசிலாந்தில் பைக் மெக்கானிக் :


கடந்த கால வாழ்க்கை குறித்து அப்பாஸ் பேசுகையில் மிகவும் மன வருத்தத்துடன் பேசியிருந்தார். அடுத்தடுத்து அப்பாஸ் நடித்த   படங்கள் வணிகரீதியாக தோல்விகளை சந்தித்ததால் பட வாய்ப்புகள் குறையவே குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார். அங்கு அவர் ஒரு பைக் மெக்கானிக்காக இருக்கிறார். அங்கு வீடு கட்டி ஒரு சாதாரண வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.