விஜய் டிவியின் ப்ரைம் சீரியலான பாரதி கண்ணம்மாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் சமீப காலங்களாக அய்யோ இந்த சீரியல்ல எப்ப முடிக்கப்போகிறீர்கள்? என்று ரசிகர்களையே கேட்கும் அளவிற்கு அவர்களை எரிச்சல் அடையச்செய்வதாக சீரியலில் கதைக்களம் அமைத்துவருகிறது. சமூகத்தில் தாய் இல்லாமலும், கருப்பாகவும் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடங்கி, எதிர்பாராதவிதமாக நடைபெறும் திருமணம் போன்று கதைக்களம் விறுவிறுப்பாக சென்றது. 






பாரதி கண்ணம்மா என்றாலே ரோஷினி தான். ஆனால்  அவர் சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் வருத்தமடைந்தனர். தற்போது புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். அதேபோல் ரோஷினையை தொடர்ந்து அகிலனும்  சீரியலில் இருந்து வெளியேறி திரைப்படத்துக்கு போனார்.  


தற்போது புது அகிலனாக நடித்து வருகிறார் சுகேஷ். இந்நிலையில் அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகியுள்ளார். இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்ட கண்மணி,  இன்னும் ஒரு ப்ரோஜக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். சீரியலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. 






இதற்கிடையே சீரியலின் கதை அரைத்த மாவையே அரைக்கும் கதையாக இருப்பதாக ப்ரோமாக்களை இணையவாசிகள் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர். இனிமேல் பாரதியும், கண்ணமாவும் சேர்வதுபோல் ஒரு டிவிஸ்ட் வைத்தாலும் இனி தமிழக ரசிகர்கள் நம்ப மாட்டார்கள், இதுவும் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.