Kaajal Pasupathi: பொழப்பு போயிடும்னு 10 நாள் பொறுத்துகிட்டேன்... அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பற்றி காஜல் பசுபதி பகீர் பேச்சு!

சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் குறித்து நடிகை காஜல் பசுபதி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Continues below advertisement

வசூல் ராஜா எம்பிபிஎஸ், டிஸ்யூம், பெருமாள், சிங்கம், கோ, மௌன குரு, கலகலப்பு 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் தான் காஜல் பசுபதி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான காஜல் பசுபதி, பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். 

Continues below advertisement

அந்த வகையில் கஸ்தூரி, அரசி, இனியா போன்ற தொடர்களில் நடித்தார். பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில், வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார்.


இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் சம்பவங்கள் குறித்து சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். கேரளா ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி ஒருமுறை பேசிய காஜல் பசுபதி, சினிமாவில் நடிக்கும் போது தன்னுடைய வாழ்க்கையிலும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

அதே போல் பெண்கள் பலரும் சர்வ சாதாரணமாக அட்ஜெஸ்ட்மெண்டை எதிர்கொள்கிறார்கள். சிலர் அதற்கு சம்மதமும் தெரிவிக்கிறார்கள். சிலர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் நடிக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு வாய்ப்பே தேவையில்லை என்று வெளிப்படையாக பேசி விடுகிறார்கள்.


இதுவே கலரா இருந்தால் சினிமா வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், கருப்பாக இருந்தால் சொல்லவே வேணாம். வாய்ப்பு கம்மி தான். இதுல கொஞ்சம் ரூடான பெண்ணாக இருந்தால் சுத்தமாக சினிமா வாய்ப்பே வராது. நான் அந்த கேட்டகரி தான். எனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் ஸ்டோரி உண்டு. பிரபல இயக்குநரின் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். 

அப்போது அந்த இயக்குநர் அனைவர் மத்தியிலும் கையால் சைகை காட்டி அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகேவா என்பது போல் என்னிடம் கேட்டார். அப்போது நான் அமைதியாக இருந்தேன். எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அந்த சீரியலில் 10 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. என்னுடைய பொழப்புக்காக 10 நாள் எதுவுமே அவரிடம் பேசாமல் பொறுத்துக்கொண்டு நடித்துவிட்டு சத்தமில்லாமல் வெளியே வந்துவிட்டேன் என கூறியுள்ளார். இருந்தாலும் அவர் ஒரு பெரிய இயக்குநர். இவர்களே இப்படி சில நேரங்களில் நடந்து கொள்வது தான் வேதனையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola