தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரை உலகத்தை அதிரவைத்துள்ளது சிறகடிக்க ஆசை பிரபலம் ஸ்ருதி நாராயணனின் வீடியோ விவகாரம். இந்த வீடியோ விவகாரத்திற்கு பிறகு தமிழ் திரை உலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பாலியல் வன்கொடுமை அளிப்பது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உள்ள வந்த பிறகுதான் புரிதல்:
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம், மாடல் மற்றும் நடிகையாக உலா வருபவர் நடிகை ஐஸ்வர்யா வடிவு தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, நானும் மீடியாவுக்கு உள்ள வர்றப்ப ஆக்டிங், ஆக்டர் ஆகிடலாம் அப்படினு யோசிச்சு வந்த பொண்ணுதான். ஆனா, அதுக்கு உள்ள வந்த பிறகுதான் அதைப்பத்திய புரிதல் ஏற்பட்டுச்சு.
அட்ஜஸ்ட்மென்ட்:
ஒரு பாெண்ணா நான் உள்ள வர்றப்ப என்கிட்ட கேட்குற முதல் கேள்வி இதுதான். நாங்க வாய்ப்பு தர்றோம். ஆனா எங்ககூட வந்து நீங்க அட்ஜஸ்ட் பண்ணனும். அது ஒருத்தர் ரெண்டு பேரு கூட இல்ல. நாங்க சொல்ற எல்லார்கூடயும் அட்ஜஸ்ட் பண்ணனும். நாங்க எப்போ எல்லாம் கூப்பிட்றமோ அப்போ எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும். நடிக்குறதை அதோட நிறுத்திகிட்டேன்.
அதுக்கு அப்புறம் நிறைய ப்ராஜெக்ட்ஸ் கேட்டாங்க. நடிக்க விருப்பம் இல்லனு சொல்லிட்டேன். நான் போல் பண்ண ஆரம்பிச்ச பிறகு அதுல அட்வான்டேஜ்தான் அவங்களுக்கு வந்துச்சு. நாங்க வந்து என்ன உங்ககிட்ட கேக்கனும் அப்படினு ஆரம்பிச்சாங்க. இப்போ போன் பண்றேன். நீதான் அவுத்து போட்டுதானே ஷுட் பண்ற என்கூட வந்து படுக்குறதுக்கு என்ன இப்படியே கேக்குறாங்க. ஓப்பனாவே கேக்குறாங்க.
இவ்வாறு அவர் பேசினார்.
வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகள் மட்டுமின்றி தற்போது இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்ஸர்களாக திகழ்பவர்களிடமும் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறப்படுகிறது.