Kaajal Pasupathi: இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.. புகைப்படம் பகிர்ந்த நடிகை காஜல் பசுபதி!
லாவண்யா யுவராஜ் | 27 Dec 2023 06:53 PM (IST)
Kajal Pasupathi : இரண்டாவது திருமணம் நடைபெற்றுவிட்டதாக புகைப்படம் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் துணை நடிகை காஜல் பசுபதி
காஜல் பசுபதி இரண்டாவது திருமணம்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமானவர் காஜல் பசுபதி. இவர் ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், கோ, சிங்கம், கவுரவம், மௌன குரு, கலகலப்பு 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நடிகையாக காமெடி, வில்லி ரோல்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் என்ட்ரி :
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த காஜல் பசுபதி, 70வது நாள் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார் காஜல் பசுபதி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்க தயங்காதவர். அந்த வகையில் தற்போது தனக்கு இரண்டாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது என கூறி தனது திருமண புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முறிந்த காஜல் முதல் திருமணம் :
காஜல் பசுபதிக்கும், டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்கு பிறகு இரண்டாவதாக சாண்டி மாஸ்டர் காதல் திருமணம் செய்து கொண்டு மனைவி, இரு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். தற்போது சாண்டியும், காஜலும் குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு தெரியாமல் சாண்டியும் காஜலும் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். சாண்டி மட்டுமின்றி சாண்டியின் மனைவிக்கும் காஜலுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது.
குழப்பும் காஜலின் போஸ்ட் :
இப்படிப்பட்ட நிலையில் தற்போது காஜல் மணக்கோலத்தில் யாரோ ஒருவர் அவருக்கு தாலிகட்டுவது போன்ற பழைய புகைப்படம் ஒன்றில் அவரை மட்டும் கட் செய்து பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவுக்கு கேப்ஷனாக "இனி என்னை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறன். திடீரென முடிவு எடுத்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே" என குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கேள்வி எழுப்பும் ரசிகர்கள் :
இதைப் பார்த்து குழம்பி போன ரசிகர்கள் “இந்த போட்டோவை பார்த்தால் பழைய புகைப்படம் மாதிரி இருக்கே. இது நம்புவது போலவே இல்லையே. பொய் தானே சொல்றீங்க?” என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். “அப்படி உங்களுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்றால் உங்கள் கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள்“ என்றும் “இது ஏதோ சினிமா ஷூட்டிங் போல தெரிகிறது” எனவும் கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.