தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். திரையுலகின் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் மட்டுமல்லாமல் , சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற நற்பெயரையும் பெற்றவர். தீவிர முருக பக்தனான சிவகுமார் ஓவியங்கள் வரைவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவர் வரைந்த பல ஒவியங்கள், பல கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மாமனாருக்கே டஃப் கொடுக்கும் வகையில் , தனது அடுக்கடுக்கான ஓவியங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஜோதிகா , முதன் முறையாக தனது திருமண நாளில், சூர்யாவின் புகைப்படம் மற்றும் ஆண்,பெண் சிங்கம் இரண்டும் ஜோடியாக இருப்பது போல பென்சில் போட்ரைட் வரைந்து ,திருமணநாள் அன்று சூர்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.
அதன் பிறகுதான் பலருக்கும் ஜோதிகாவிற்கு இப்படியான அசத்தல் திறமை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு “FREE YOUR MIND " என்ற தீமின் அடிப்படையில் அசத்தலான மாடல் பென்சில் போட்ரைட் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
அதன் பிறகு தத்ரூபமாக பென்சில் ஷேடில் ரோஜாப்பூ ஒன்றை வரைந்திருந்தார். அதில் நீர்த்துளிகள் தேங்கிருப்பது போல காட்டியிருந்ததுதான் ஹைலைட். அதற்கு கேப்ஷனாக “ வாழ்க்கை என்னும் செடி உங்களை எங்கு நடுகிறதோ, அங்கே பூக்கத் தொடங்குங்கள்“ என அழகிய கேப்ஷனை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு நடிகை ஜோதிகா , அழகான கொரில்லா குரங்கின் முகத்தை வரைந்து , விலங்குகள் குறித்த விழிப்புணர்வு வாசகத்தை தெறிக்க விட்டுள்ளார்.
அடுத்ததாக தங்கள் வீட்டு செல்ல பிராணியான, ஓரியோ என்னும் நாய்க்குட்டியின் போர்ட்ரைட் புகைப்படத்தையும் ஜோதிகா பகிர்ந்துள்ளார். அதையும் ஜோதிகாவே வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.