நம்முடைய காலை வேளை எப்படி அமைகிறதோ அதைப் பொருத்துதான் நம்முடைய நாளும் அமையும். காலை எழுந்ததும் முதலில் கேட்கிற பாடல் எப்படி நாள் முழுவதும் நம்மை முனுமுனுக்க வைக்கிறதோ, அதுபோலதான் நம்மை நாள் முழுவதும் எனர்ஜியாக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது இந்த ஏபிசி ஜூஸ்.
இது உடம்பில் சீரான ரத்த ஓட்டத்துக்கும், கொழுப்பைக் குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதனால் இதயம் சம்பந்தமான மாரடைப்பு போன்ற நோய்களும், நுரையீரல் பிரச்னைகளும் வராமல் தடுக்கப்படுகிறது. மூளைக்கு எனர்ஜியைத் தரும். நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும், சருமம் தொடர்பான பிரச்னைகளையும் போக்கும். கருவளையம், சருமம் சுருக்கமடைவது போன்றவற்றைத் தடுப்பதால் இளமையாக இருக்க உதவும். கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். இந்த ஜூஸில் கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்
செய்முறை:-பீட்ரூட் சிறியது – 1, கேரட் -2, ஆப்பிள் – 1. இந்த மூன்றையும் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டாமலேயே அருந்தலாம். இதனுடன் எழுமிச்சை மற்றும் புதினா சேர்த்தும் அருந்தலாம். காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்ல பலனைத் தரும்.