IPL Gambling: சென்னை சொகுசு விடுதியில் ஐபிஎல் சூதாட்டம்: கோடிகளில் குளித்த தரகர் கைது!

கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் பெயரில் இணையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஹரிகிருஷ்ணன், கிரிக்கெட் போட்டி சூதாட்ட தரகராகவும் இருந்துள்ளார்.

Continues below advertisement

சென்னையில் ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் நடத்தி வந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரிகிருஷ்ணன் ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டரா என்றும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

மாமல்லபுரம் ராடிசன் புளூ ஹோட்டலில் கைதானவரிடம் இருந்து 193 கிராம் தங்கம், ரூ.24.68 லட்சம், 6 கிலோ வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், ஒரு ஐபேட், ஒரு லேப்டாப் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் கட்டி ஏமாந்த சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் பெயரில் இணையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஹரிகிருஷ்ணன், கிரிக்கெட் போட்டி சூதாட்ட தரகராகவும் இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement