ஹாலிவுட் படங்களில் கேரளாவை சேர்ந்த மலையாள பெண் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தான் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். தற்போது ஒரு நடிகை ஹாலிவுட் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளார். 


ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்


சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’ படத்தில் டைனோசர் பூங்காவின் பாதுகாவலராக நடித்திருந்தவர் வரதா சேது. இவர் அமெரிக்காவில் வாழும் மலையாள பெண். இந்தப் படம் மட்டும் அன்றி ஹாலிவுட்டில் தயாரான ‘நவ் யூ சீ மீ 2’ படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.



ஸ்டார் வார்ஸ்


விண்வெளி புனைகதை தொடரான ‘ஸ்டார் வார்ஸ்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ஹாலிவுட் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். ஸ்டார் வார்ஸ் சீரிஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிறைய பேர் உண்டு. அப்படி ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேரளாவை சேர்ந்த நடிகை நடிக்கிறாரென்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


மலையாளத் திரைப்படம்


முதல்முறையாக இவர் மலையாள படத்திலும் நடிக்க இருக்கிறார். 'பிரமதாவனம்' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் வரதா சேது. இந்த படத்தை ஜெயராஜ் இயக்குகிறார். ஷாம் நீல் நாயகனாக நடிக்கிறார். உன்னிமுகுந்தன் முக்கிய கேரக்டரில் நடிக்க, சச்சு சாஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீனிஷ் இசை அமைக்கிறார்.



ஹாலிவுட்டில் எப்படி


‘பெற்றோர் அமெரிக்கா சென்றதும் அங்கேதான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். விடுமுறையில் கேரளாவுக்கு வருவேன். அப்போது மலையாளம் கற்றுக்கொண்டேன். அமெரிக்காவில் படித்தபோது, தியேட்டர்களில் நடித்தேன். அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது’ என்றார் வரதா சேது. தற்போது ஒரு மலையாளப் படத்தில் நடித்து வந்தாலும், மேலும் நிறைய படங்கள் ஹாலிவுட்டில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.


நம்மூர் ஹாலிவுட் நடிகர்கள்


நம்மூரில் இருந்து ரஜினி, தனுஷ் போன்றோர் ஹாலிவுட் சென்றிருந்தாலும், நேரடியாக ஹாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமானவர்கள் குறைவு. இந்தியாவில் இருந்து தீபிகா படுகோன், இர்ஃபான் கான் போன்றோர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.