உலக அளவில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை சுமார் 100 கோடிக்கும் மேலானாவர்கள். தங்களது பயனாளர்கள் டெலிகிராம் மூலம் பல வசதிகளை பெறுதை மேம்படுத்த புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது டெலிகிராம். அந்த வகையில், டெலிகிராமில் புதிய வசதிகளை பெற விரும்புபவர்கள் சந்தா தொகை செலுத்தி பெற்று கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகிராம் செயலியில் பிரீமியம் பிளான், சந்தா கட்டணம் செலுத்துவது இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் (Pavel Durov) தெரிவித்துள்ளார்.
மெசேஜிங் செயலியான டெலிகிராம் தற்போது பல்வேறு வசதிகளை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக ப்ரீமியம் பிளான் என்ற புதிய சந்தா செலுத்தும் திட்டத்தை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.
”டெலிகிராம் விளம்பரதாரர்களிடம் இருந்து நிதியை பெறுவது இல்லை. முதன்மையாக அதன் பயனர்களால் நிதியளிக்கப்படுகிறது. ஜூன் முதல், பயனர்கள் சில அம்சங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், டெலிகிராம் ஏற்கனவே உள்ள அம்சங்களுக்கு கட்டணம் வசூலிக்காது. புதிய அம்சங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.” என்று துரோவ் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, டெலிகிராம் பயனாளர்களில் 22% பேர் இந்தியாவில் வசிப்பவர்கள். டெலிகிராமிற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கான சந்தை மதிப்பை புரிந்து கொண்டு இந்த பிரீமியம் முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. டெலிகிராமில் இனி வரும் காலங்களில் கொடுக்கப்படும் அப்டேட்கள், ஸ்டிக்கர்கள், இமோஜிக்கள் ஆகியவற் சந்தை பயன்படுத்த செலுத்த வேண்டும்.
என்னென்ன புதிய அப்டேட்கள்:
இதில் 4 ஜி.பி. வரை ஃபைல்கள் அனுப்பும் வசதி, புதிய ரியாக்சன்ஸ், இமோஜிகள், விளம்பரங்களுக்கு தடை, அதிக வேக லோடிங் டைம் உளிட்ட பல புதிய அம்சங்களை டெலிகிராம் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு வழங்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்