தினந்தினம், 1 Year of, Anniversary, Nostalgia என பல விஷயங்களை நினைத்து ஹேஷ்டேக் அமைத்து அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் கொரோனாவின் எண்ட்ரிக்கு கூட ஒரு வருட விழா கொண்டாடியாச்சு. 2020-ம் ஆண்டு மோசமோ மோசம் என திட்டி தீர்த்த கையோடு, 2021 அதைவிட சுமார் என உச் கொட்டிக் கொண்டிருக்கின்றோம். அதற்குள், இந்த ஆண்டின் ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டது. முழு ஊரடங்கு, தளர்வுகள் என இந்த ஆறு மாதங்கள் கடந்து வந்ததில் ஹைலைட் விஷயங்கள் எதுவும் இல்லை, வழக்கமான அதே மிக்சர்தான்.


நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார், இந்த வருடத்தின் ‘செகண்ட் ஹாஃப்’ எப்படி இருக்கப் போகிறதோ என்று! அப்போதுதான் தோன்றியது, அட ஆமாம்ல, ”ஜூன் போயிட்டு ஜூலை வருதுனு”. உடனே நினைவுக்கு வந்தது “ஜூன் போனால் ஜூலை காற்றே…. கண் பார்த்தால் காதல் காற்றே….” பாடல்!



ஆல்-டைம் ஃபேவரைட் பாடல்களின் ப்ளேலிஸ்டில் இந்த பாடலுக்கென தனி இடம் உண்டு. 2007-ம் ஆண்டு உன்னாலே உன்னாலே படம் ரீலீசுக்கு முன் அப்படத்தின் டிரெயிலர் டிவியில் ஒளிபரப்பானது. ஒரு சில நொடிகள் மட்டுமே வந்துபோகும் அந்த intro மியூசிக் கேட்டவுடன் மனதில் ஒட்டிக்கொண்டது.


இப்போதுதான் யூட்யூப், சமூகவலைதள வைரல் எல்லாம்! சில ஆண்டுகளுக்கு முன், எஃப்.எம்மில் டாப் ரேட்டட் பாடலில் இதுவும் ஒன்று! எஃப். எம்மில் சக்கைபோடு போட்ட ஜூன் போனால், படம் ரிலீசானவுடன் விஷுவலாகவும் செம்ம ஹிட்!


டிவி சேனல்களும் சலிக்காமல் இப்பாடலை ஒளிபரப்பின. ரசிகர்களும் சலிக்காமல் பார்த்து ரசித்தனர். ஜூன் போனால் ஜூலை காற்றே பாடலின் மற்றொரு ரெக்கார்டு என்னவென்றால், அதிக அளவில் மொபைல் போன் ரிங்டோனாக செட் செய்யப்பட்ட பாடலாக இதுவாகதான் இருக்கும்.






கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது இப்பாடல் வெளியாகி, ஆனால் இப்போது கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே, ரசிக்க வைக்கும் சூப்பர் பாடல்!


பா.விஜய் வரிகளில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், க்ரிஷின் குரலில் “ஜூன் போனால்… ஜுலை காற்றே…” ஒரு எவர்க்ரீன் சாங்! ஸ்பாடிஃபை, ஜியோ சவன், கானா என பல மியூசிக் அப்ளிகேஷ்ன்களிலும் இந்த பாட்டின் ஹை குவாலிட்டி வெர்ஷன் வெளியாகி இருந்தாலும், யூட்யூப்பில் மட்டும் நல்ல குவாலிட்டி இன்னும் வெளியாகவில்லை. படத்தை டவுன்லோடு செய்து அல்லது இப்போதும் டிவியில் ஒளிபரப்பாகும்போது பார்த்து ரசித்து கொள்ளலாம்!



சரி, ”இன்னிக்கு எதுக்கு இந்த பதிவு?” என்று உங்கள் மைண்ட்-வாய்ஸ் சொல்வது கேட்கிறது. வேறொன்றுமில்லை, ஜூன் மாசம் முடிஞ்சு ஜூலை வரப்போகுது. இந்த பாடலை கேட்டு ரசித்தப்படி இந்த ஆண்டின் இரண்டாவது இன்னிங்ஸை சமாளிக்க தயாராவோம் மக்களே!