சூர்யா 44
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 44. பூஜா ஹெக்டே , கருணாகரன் , ஜோஜூ ஜார்ஜ் , ஜெயராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். முதல் கட்டமாக அந்தமான் தீவுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் இரண்டு பாடல் காட்சிகளும் சில ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப் பட்டன. இதனைத் தொடன்ர்து தற்போது ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி நடிகர் சூர்யாவின் 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : Suriya 44: ட்ரிபிள் ட்ரீட்! சூர்யா பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - படுகுஷியில் ரசிகர்கள்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 171 ஆவது படமாக உருவாக இருக்கிறது கூலி. இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது . பேட்ட , தர்பார் , ஜெயிலர் , வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கிரிஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க : Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
சட்னி சாம்பார்
அந்த வகையில் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க : Chutney Sambar Teaser : யோகி பாபு நாயகனாக நடிக்கு புதிய சீரிஸ்... வரவேற்பை பெறும் சட்னி சாம்பார் டீசர்