நடிகர், சமையல் கலைஞர், குக் வித் கோமாளி நடுவர் என பல முகங்களை கொண்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல் நிலையத்தில் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்டா புகார் அளித்துள்ளார்  இதனிடையே தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருப்பவ்ர ஜாய் கிரிசல்டா. இவருக்கும் மாதம்பட்டி ரங்கராஜூவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவர் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர். அதேபோன்று மாதம்பட்டி ரங்கராஜூவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2 ஆண் மகன்கள் உள்ளனர். ஆனால், மனைவியை விவாகரத்து செய்யவில்லை. இந்நிலையில், ஜாய் கிரிசல்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும், ஜாய் கிரிசல்டா கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே மாதம்பட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், என்னிடம் பேச மறுப்பதாகவும் சமீபத்தில் புகார் அளித்தார். ரங்கராஜ் உறவினர்கள் என்னை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் ஜாய் கிரிசல்டா தெரிவித்தார். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில்,  "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார். தர்மம் ஜெயிக்கும்" என ஜாய் கிரிசல்டா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், உண்மை  ஜெயிக்கும் என்றும் இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Continues below advertisement

  கடந்த வாரம் மாதம்பட்டி ரங்கராஜின் அலப்பறைகள் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜாய் கிரிசல்டா. அவரை டேக் செய்து போட்டுள்ள இந்த பதிவுக்கு, தன்னுடைய குழந்தையை சுமக்கும் என்னை ஏமாற்றுபவர் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றுவார் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார்.