ஜோஷ் செயலி:

நடிப்பு, பாடல் மற்றும் நடனம் போன்ற பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியான, டிக் டாக் செயலி உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்தியாவிலும், கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டிருந்தது. ஆனால், விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, அதே அம்சங்களை கொண்ட ஜோஷ் எனும் செயலி, உள்நாட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, குறுகிய வீடியோ பயன்பாடுகளுக்கான சந்தையில் ஜோஷ் முன்னணியில் உள்ளது.

விளம்பரபணியில் ஜோஷ் செயலி:

பயனாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இரண்டிலும் தலைமைத்துவத்தை நிரூபித்து, இந்த செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்,  தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய சந்தை இருப்பதால், தமிழ் திரைப்படம் ஒன்றை விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஜோஷ் நிறுவனம் களமிறங்கியது.

என்ஜாய் திரைப்படம்:

அதன்படி,  LNH கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பெருமாள் காசி இயக்கிய, இளைஞர்களை இலக்காகக் கொண்டு காதல் களத்தின் அடிப்படையில் உருவான என்ஜாய் திரைப்படம் டிசம்பர் 23, 2022 அன்று திரையரங்குகளில் வெளியியானது. இதில் சைதன்யா, ஜி.வி. அபர்ணா, நிரஞ்சனா நெய்தியார் மற்றும் மதன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் ஒப்பந்தத்தில் ஜோஷ் நிறுவனம் களமிறங்கியது.

என்ன சவால்?

இதற்காக, #EnjoyMovie எனும் ஹேஷ் டேக் உடன் ஒரு சவால் ஜோஷில் தொடங்கப்பட்டது. டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கிய இந்த பரப்புரை கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி முடிவடைந்தது.  150 க்கும் மேற்பட்ட சிறந்த ஜோஷ் படைப்பாளிகள் மற்றும் குறிப்பிடத்தக்க UGC படைப்பாளர்களால் வழிநடத்தப்பட்டது.

இந்த சவாலில், ஜோஷ் செயலி பயனாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, படத்தின் பாடல்களுக்கு உதடுகளை ஒத்திசைத்து நடனமாடுவது தொடர்பான வீடியோவை வலியுறுத்தப்பட்டனர் இந்த சவாலில் பங்கேற்று வெற்றி பெற்ற நபர்களுக்கு, திரையரங்கிற்கு சென்று என்ஜாய் திரைப்படத்தை காண இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று, பல்வேறு பரிசுகளை பெறக்கூடிய வகையிலான சவால்கள் ஜோஷ் செயலியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சம்:

டிக்டாக் போன்று குறுகிய வீடியோக்களை பகிர்வதற்கும் உருவாக்குவதற்கும் ஜோஷ் சிறந்த செயலியாகும். ஜோஷ் செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயன்பாடாக இருப்பதால் இது இந்தி, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது. இந்த செயலியில் வேடிக்கையான பதிவு, கவர்ச்சிகரமான பதிவு, நடனம் இசை போன்ற பல்வேறு வகையில் பொழுதுபோக்கு வீடியோக்களை பகிரலாம். ஜோஷ் பயன்பாட்டின் தனித்துவ அம்சம் குறித்து பார்க்கையில் இந்த செயலியை பயன்படுத்த அதற்கென பயனாளர் கணக்கை வைத்திருப்பது கட்டாயமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.