சமீப காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உச்சரித்த பாடல் ஜொர்தாலயே உர்ட்டாதே.. என்னடா இது பாட்டும் புரியல, யாருக்கும் இதபத்தி அறியலன்னு பசங்க மனசுக்குள்ள போட்டு புலம்பு புலம்புன்னு புலம்புனாலும், வாய்ல இந்த பாட்டு எப்ப பாரு முனகிட்டுதான் இருந்தோம். 


டிக்டாக்கில் இந்த சாங் முதலில் மிகப்பெரிய ஹிட் அடிக்க, வழக்கம்போல இந்த பாடலும் ஒன்னு வடமாநில பாட்டுபோல, இல்லைனா ஏதோ வெளிநாட்டு பாடலுன்னு பாட்டு கேட்டு கம்முன்னு இருந்தோம். அப்புறம்தான் தெரிஞ்சது இது நம்ம உள்ளூர் பிள்ளைகளின் புள்ளிங்கோ பாட்டுன்னு. 





ஆரம்பத்துல இருந்து அதிரடியா ஸ்டார்ட் ஆகுற பாட்டு, கடைசி வர பீட் அஹ் இறக்கமாக ஹார்ட்பீட்ட எகிற வச்சிட்டாங்க.. வார்த்தைகள் புரியல, அதில் வரும் வசனங்கள் புரியல, இருந்தும் அந்த பாட்டுல ஏதோ ஒன்னு இருக்குயா நமக்கே தோணும். 


கானாவையும், ராப் இசையையும் ஏதோ மாதிரி சேர்த்து,அதே மியூசிக்ல கோர்த்து பின்னி பெடலெடுத்துடாங்க. யாராச்சும் இறந்த வீட்ல இந்த பாட்ட போட்டா, இறந்தவர் எந்திரிச்சி நின்னு மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் ஸ்டேப்ப மல்லாக்க படுத்துகிட்டே போட்டு இருப்பாரு. அப்படி இந்த பாட்டு தாறுமாறு தக்காளி சோறா இருந்துச்சுன்னா பார்த்துகோங்க! 


ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே


தொர்ட்டா தூக்கினு தொரத்தாத


கரத்தா கத்துனு மெரட்டாத


அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால


இந்த சாங் நமக்கு பாடிய அசல் கோலார்தான், இந்த பாட்டை எழுதி இயக்கவும் செய்துள்ளார். ஜொர்தாலயே பாட்டுக்கு அர்த்தம்தான் என்னைப்பா என்று ஒரு தனியார் யூடியூப் சேனலில் கிரேஸ் கருணாஸ் அந்த டீமிடம் விளக்கம் கேட்க, அவர்கள் சொன்ன விளக்கம் எந்தவொரு தமிழ் அகராதியிலும் இருந்து இருக்காது. இனியும் இருக்காது. 


முன்னோர்கள் அன்றே சொன்ன குண்டு சட்டியில நண்டு ஓடுன மாதிரி, அட விடுங்க நம்ம பிரபு தேவா பாட்டுல கூட வருமே ஐயகோ! குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே! அதையே இந்த பாட்டுல கொஞ்சம் திருப்பிபோட்டு சும்மா இருக்க செம்ப, எடுத்துபோட்டு அடிக்கடி உருட்டாத தான் -ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே, தொர்ட்டா தூக்கினு தொரத்தாத அர்த்தமாம்..




அதே மாதிரி கரத்தா கத்துகிட்டேனு சும்மா எல்லாத்தையும் மிரட்டாத, அப்புறம் காய்ச்சல் வந்து படுக்காத- இது தான் கரத்தா கத்துனு மெரட்டாத, அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தாலன்னு இந்த பாட்டு முழுவதும் கருத்துகள் குவிந்து கிடக்கு. 


இந்த பாடலின் அர்த்தங்களை காதில் எடுத்துபோட்டு உருட்டுவதும், அதை வேண்டாம் என்று விரட்டுவதும் அவரவர் மனநிலையை பொருத்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண