ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமடா படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


வெளியான டைட்டில் போஸ்டர்:


நடிக்கும் கதாபாத்திரங்களை மக்களிடம் எடுத்து செல்வதில் வல்லவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். பெரும்பாலும் மலையாள படங்களே நடத்திருந்தாலும், சில தமிழ் படங்களிலும் நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றவர். இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள புதிய படம் புலிமடா. இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


"பெண் வாசனை" என்ற டேக் லைனுடன், இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புலிமடா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை மலையாள சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் இயக்குநர் ஏகே சஜன் கையாள்கிறார்.


மேலும், கேமரா மூலம் பல அற்புதம் செய்த வேணு ஐ.எஸ்.சி., இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பல நல்ல படங்களை மலையாள ரசிகர்களுக்கு கொடுத்த ஏ.கே.சாஜன் மற்றும் வேணுவிடம் இருந்து ஒரு பிரமாண்டமான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


இரட்டா படத்தின் இரண்டாம் பாகம்:


ஜோஜு ஜார்ஜ் நடித்த இரட்டா படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த புலிமடா. புலிமடா படத்தை ஐன்ஸ்டீன் சாக் பால், ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் லான்ட் சினிமாஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா ஆகியவற்றின் கீழ் தயாரித்துள்ளனர்.  தென்னிந்திய உலகை கலக்கி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரை தவிர, செம்பன் வினோத், லிஜோ மோல். ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, பாலச்சந்திர மேனன், ஜானி ஆ.ண்டனி, கிருஷ்ண பிரபா, சோனா நாயர் உள்ளிட்ட மலையாள நடிகர்களும் புலிமடா படத்தில் நடித்துள்ளனர். 


இஷான் தேவ் இசையமைக்க, பின்னணி இசை அனில் ஜான்சன் செய்துள்ளார்.  தயாரிப்பு வடிவமைப்பாளர் - வினீஷ் பங்களா. நிர்வாகத் தயாரிப்பாளர் - ஷிஜோ ஜோசப். புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் - ராஜீவ் பெரும்பாவூர். கலை இயக்குநர் - ஜித்து செபாஸ்டியன். ஒப்பனை-ஷாஜி புல்பள்ளி, ஷமீர் ஷ்யாம்.  காஸ்ட்யூம் - ரஹ்மான்.


முதல் பாகம்:


அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம் 'இரட்டா'. இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆகியோரின் கதையை சொல்லும் இப்படம் பல சஸ்பென்ஸ்களை மறைத்து த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை ஜோஜு ஜார்ஜின் அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் இணைந்து தயாரித்திருந்தனர்.