சென்னையில் இன்று பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக முக்கிய பகுதிகளான அடையாறு, தாம்பரம், போரூர், பெரம்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்று காலை மின்தடை செய்யப்பட உள்ளது.
அடையாறு :
பெசன்ட் நகர் முதலாவது பிரதான சாலை, ஜீவரத்தினம்நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபநகர்.
தாம்பரம் :
டி.என்.எஸ்.சி.பி. வெண்பா அவென்யூ. கன்னிகோயில் தெரு, டி.என்.எச்.பி. காலனி, எம்.ஜி.ஆர். தெரு, ராஜகீழ்ப்பாக்கம் முகாம் சாலை, வேளச்சேரி முக்கிய சாலை, ராஜஐயர் தெரு, நெல்லூர்அம்மன் கோவில் தெரு, அவ்வை நகர், கண்ணன்நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் :
கோவூர் பகுதி முழுவதும், குன்றத்தூர் சாலையில் ஒரு பகுதி, அம்பாள் நகர், புருஷோத்தமன் நகர், ஆனந்த விநாயகர் கோவில் தெரு, திருமுடிவாக்கம், எருமையூர் கிராமம், தர்கா, ராயப்ப நகர், நடுவீரப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பெரம்பூர் :
மதுரைசாமிமாடம் அனைத்து தெரு, டி.வி.கே. நகர், செம்பியம், ஜெய்பீம் நகர் அனைத்து தெரு, அம்பேத்கர் நகர், பெரியார் நகர், ஜவஹர் நகர், ஜி.கே.எம். காலனி, கொளத்தூர் ஆசிரியர்கள் கில்ட் காலனி, அன்னை இந்திரா நகர், அன்னை தெரசா நகர், கிருஷ்ணாநகர், பவானிநகர், சத்யாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
கே.கே.நகர் :
ரங்கராஜபுரம் ஒரு பகுதி, கோடம்பாக்கம் ஒரு பகுதி, அசோக்நகர் மேற்கு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
ஆவடி:
முருகப்ப பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல்நிலையம், பி.எஸ்.என்.எல்.- சி.டி.எச். சாலை. எச்.வி. எச். சாலை, ஆவடி பஸ் டெப்போ, செக்போஸ்ட், கஸ்தூரிபாய் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
அம்பத்தூர் :
ஜெ.ஜெ.நகர் மேற்கு வேணுகோபால் நகர், பள்ளித்தெரு, ஜியான்தெரு, வி.ஜி.என். சின்னகாலனி, பி.கே.எம். சாலை, நாகேஸ்வர சாலை
ஐ.டி.சி. பிரிவு :
சோழிங்கநல்லூர் திருவள்ளூர் சாலை, பாண்டிச்சேரிபட்டி, ஹிராநந்தினி ஒரு பகுதி.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்தடை செய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்