மும்பையை சேர்ந்த நடிகர் ஜான் கொக்கன், தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர்.கே ஜி எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் கேங்ஸ்டர் ரோலில் மிரட்டியிருந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானது சார்பட்ட பரம்பரை படத்தின் மூலமாகத்தான்.
பா ரஞ்சித் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் சார்பட்ட பரம்பரை. குத்துசண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். படத்தில், முத்திரை பதிக்கும் வகையில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தன.
அவற்றுள் ஒருவர், வேம்புலி. க்ளைமேக்ஸ் காட்சியில், ஆர்யாவுடன் குத்துச்சண்டையில் மோதும் எதிராளியாக களம் இறங்கும் வேம்புலியின் கதாப்பாத்திரத்தில் கலக்கியிருந்தார், ஜான் கொக்கன். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்ற இப்படம், அதில் நடித்திருந்த ஜான் கொக்கனுக்கும் நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.
ஹைப் க்ரியேட் செய்யும் துணிவு
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் இந்த வருடபொங்கலிற்கு க்ளாஷாக காத்திருக்கிறது. விஜய்-அஜித்தின் படம் நிண்ட நாட்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாவதால், சினிமா ரசிகர்கள் “என்ன நடக்க காத்திருக்கோ..” என ஆவலுடன் உள்ளனர்.
ஹெச்.வினோத் மற்றும் அஜித்தின் கூட்டனியில், முன்னர் உருவான வலிமை படத்தின் அப்டேட் வெளியாக நெடு நாட்கள் எடுத்தது. இதனால் அஜித் ரசிகர்கள், பயங்கர டென்ஷனாகி படக்குழுவை படத்தின் அப்டேட் குறித்து நச்சரித்தனர். இதையடுத்து, முன்னர் செய்த தவரை மீண்டும் ரிபீட் செய்யக்கூடாது என்று முடிவெடுத்த படக்குழு, படத்தின் ஒரு ஒரு வேலைகளும் முடியும் தருவாயில் அது குறித்த புகைப்படங்களையும் செய்திகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதனால்,துணிவு படத்திற்கான ஹைப், எகிறி வருகிறது.
ஜான் கொக்கன் பதிவு:
நடிகர் ஜான் கொக்கன், அஜித்தின் துணிவு படத்தில் நடித்துள்ளார். துணிவு படத்தின் பின்னணி வேலைகள், பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இப்படத்தில் நடித்துள்ள, மஞ்சு வாரியரும் சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகளில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து, நடிகர் ஜான் கொக்கனும் இன்று ஒரு சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், 13 ஆண்டுகளில் முதன்முறையாக தென்னிந்திய மொழி ஒன்றிற்கு டப்பிங் பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும், “5 மொழிகளில், 40 படங்கள் நடித்திருந்தாலும், முதன் முறையாக தென்னிந்திய மொழி ஒன்றிற்கு டப்பிங் பேசியுள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஜான் கொக்கன். இதையடுத்து, “என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஹெச். வினோத்திற்கு நன்றி” எனவும், அவருக்கு தமிழ் பேச உதவி புரிந்த அவரது மேலாளர் கண்ணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “அஜித் ரசிகன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்” என்பதே, அவரது பதிவின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. ரசிகர்கள், ஜான் கொக்கனின் பதிவிற்கு லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.