இணையதள வளர்ச்சிக்குப் பிறகு ஸ்மார்ட்போன்களிலே திரைப்படங்கள், தொடர்கள். வெப்சீரிஸ் ஆகியவற்றை பார்த்துக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது. அதற்காக ஹாட்ஸ்டார், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் என பல ஓடிடி தளங்கள் உள்ளது. 

Continues below advertisement

இதில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓடிடி தளமாக இந்தியாவில் ஹாட்ஸ்டார் உள்ளது. டிஸ்னி வசம் இருந்த ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கியுள்ளதால், இதுநாள் வரை டிஸ்னி ஹாட்ஸ்டராக இருந்தது தற்போது ஜியோ ஹாட்ஸ்டாராக மாறியுள்ளது. 

இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய கட்டண விவரத்தை கீழே விரிவாக காணலாம். புதிய கட்டணத்தின் படி ஜியோ ஹாட்ஸ்டார் 3 திட்டத்தின் கீழ் பயன்படுத்தலாம்.

Continues below advertisement

1. மொபைல் திட்டம்:

ஜியோ ஹாட்ஸ்டாரை பயனாளர் தான் பயன்படுத்தும் மொபைல் போனில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 3 மாதத்திற்கு  கட்டணம் ரூபாய் 149 ஆகும். இதுவே ஓராண்டுக்கு சந்தாதாராக வேண்டும் என்றால் ரூபாய் 499 கட்டணம் ஆகும். இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் பயனாளர் தன்னுடைய மொபைல் போனில் மட்டுமே ஜியோ ஹாட்ஸ்டார் சேவைகளைப் பெற முடியும். 

2. சூப்பர் திட்டம்:

ஜியோஹாட்ஸ்டாரை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் பயன்படுத்த இந்த திட்டம் ஏற்ற திட்டம் ஆகும். அதாவது, மொபைலிலும், வீட்டில் உள்ள தொலைக்காட்சியிலும் ஜியோ ஹாட்ஸ்டாரை பயன்படுத்த இந்த திட்டம் ஏதுவான திட்டம் ஆகும். மொபைல், தொலைக்காட்சி, டேப்ளட் என ஏதாவது இரண்டு சாதனத்தில் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். 3 மாதத்திற்கு இந்த திட்டத்திற்கு 299 ரூபாய் ஆகும். அதேசமயம் ஓராண்டுக்கு இந்த திட்டத்திற்கு சந்தாதாரராக ரூபாய் 899 கட்டணம் ஆகும். 

3. ப்ரிமியம் திட்டம்:

ஜியோ ஹாட்ஸ்டாரின் பெரிய திட்டம் இந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் சந்தாதாரர் ஆகும் பயனாளர் ஹாட்ஸ்டாரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் விளம்பரம் இல்லாமல் பார்க்க இயலும். ஆனால், நேரலை நிகழ்ச்சிகளில் விளம்பரம் ஒளிபரபரப்பாவதைத் தவிர்க்க முடியாது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் ஜியோ ஹாட்ஸ்டாரை காண இயலும். இந்த திட்டத்திற்கு மாதந்தோறும் ரூபாய் 299 கட்டணம் ஆகும். ஆண்டிற்கு ரூபாய் 1499 கட்டணம் ஆகும். 

இந்த திட்டங்கள் மட்டுமின்றி சூப்பர் திட்டம் மற்றும் ப்ரிமியம் திட்டத்திற்கு டால்பி அட்மோஸ் ஆடியோவும் ஜியோ ஹாட்ஸ்டாரால் வழங்கப்படுகிறது. அதேபோல, வீடியோவின் தரமும் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்றாற்போல மாறுபடுகிறது. சூப்பர் திட்டத்தின் கீழ் எஃப்.எச்.டி. தரத்தில் படங்கள், வெப்சீரிஸ், நாடகங்கள் ஒளிபரப்பாகும். அதேசமயம், ப்ரிமியம் திட்டத்தில் 4கே தரத்தில் படங்கள் ஒளிபரப்பாகும்.