நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில் மூன்றாம் பாகம் இயக்கப்படவுள்ளது
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான‘8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வெற்றியின் 2வது படம் ‘ஜீவி’. இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜீவி படம் வசூலில் சாதனைப் படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
கருணாகரன், ரோகிணி, மைம் கோபி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிலையில் அறிமுக இயக்குநர் வி.ஜெ.கோபிநாத் இப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். படத்தின் முக்கோண எஃபெக்ட் கதையம்சம் பார்வையாளர்களின் மூளைக்கு வேலை தரும் வகையில் உருவாக்கப்பட்டதால் படம் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிக்கப்பட்டிருக்கும்.
ஜிவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் எடுத்திருக்க முடியாது என்ற அளவில் பேசப்பட்டு ஜீவி 2 படம் பெரும் வெற்றி பெற்றது.
இரண்டாம் பாகம் வெற்றி பெற்ற நிலையில், 3 ஆம் பாகத்தை நிச்சயாமாக இயக்கப்படும் என இயக்குநர் கோபிநாத் தெரிவித்துள்ளார். ”இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதும் போது மூன்றாம் பாகத்தின் கதைக்கு வழிவகுக்கும் வகையில்தான் எழுதி இருந்தேன். எந்த அடிப்படை கதை முழுக்கதைக்கு உதவுமோ அக்கதையை தேர்ந்தெடுத்து மூன்றாம் பாகத்தை இயக்க துவங்குவேன்” என்று வி.ஜே.கோபிநாத் கூறினார்
மேலும் படிக்க : சிவாங்கி முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்த செளத் குயின்ஸ்!