சைரன்


ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


இரண்டு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி


ஜெயம் ரவி சமீபத்தில் நடித்த இறைவன் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சைரன் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.  இரண்டு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாக  நடித்துள்ளார். இந்த டீசரில் ஒரு ஜெயம் ரவி ஆம்புளன்ஸ் டிரைவராகவும் மற்றொருவர் சிறையில் இருக்கு கைதியாகவும் இருக்கிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப படம் ஜெயம் ரவியின் திரைப்படம் கரியரில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.