ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்களான ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் நிச்சயம் செய்து 20 வருடங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை லாஸ் வேகாஸில் திருமணம் செய்துக்கொண்டனர்.


காதல் முதல் பிரேக் அப் வரை :


ஹாலிவுட் பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸிற்கு அறிமுகம் பெரிதாக தேவைப்படாது . இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 218 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள் . ஜெனிஃபரும் ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான  Ben Affleck க்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு கிக்லி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து காதல் வயப்பட்டனர். 2003 ஆண்டே இந்த காதல் ஜோடிகள் தங்களின் நிச்சயத்தையும் முடித்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் பிரேக் அப் செய்துக்கொள்ள போவதாக அதே ஆண்டு இருவரும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து ஜெனிபர் லோபஸ் அதே ஆண்டு மார்க் ஆண்டனியை மணந்தார். பென் அஃப்லெக் 2005 இல் ஜெனிஃபர் கார்னரை மணந்தார்.






 


மீண்டும் இணைந்த ஜோடி:


சில காலங்கள் மட்டுமே சுமூகமாக சென்ற இருவரின் திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. ஜெனிபர் லோபஸ் அடுத்ததாக இரண்டு திருமணங்களை செய்து அதிலிருந்தும் வெளியேறிவிட்டார். ஜெனிஃபர் மற்றும் பென் அஃப்லெக் இருவருமே தனியாகவே வசித்து வந்த நிலையில் இவர்களின் காதல் சமீபத்தில் மீண்டும் மலர துவங்கியதாக செய்திகள் வெளியானது. கடந்த ஏப்ரம் மாதம் இருவரும் மீண்டும் நிச்சயம் செய்துக்கொண்டனர்


திருமணம் :


இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு, லாஸ் வேகஸில் உள்ள  தி லிட்டில் ஒயிட் சேப்பலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காதல் ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்டனர். இதனை ஜெனிஃபர் லோபஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிஃபருக்கு தற்போது 52 வயதாகிறது.பென் அஃப்லெக்கிற்கு 49 வயதாகிறது. ஜெனிஃபருக்கு இது 4 வது திருமணம் , அஃப்லெக்கிற்கு  இரண்டாவது.






4வது திருமணம் பற்றி ஜெனிஃபர் :


திருமணம் குறித்து ஜெனிஃபர் லோபஸ் கூறுகையில் "காதல் உண்மையானதாக இருக்கும்போது, ​​​​திருமணத்தில் முக்கியமான ஒரே விஷயம் ஒருவரையொருவர் மற்றும் ஒருவரையொருவர் நேசிப்பது, கவனிப்பது, புரிந்துகொள்வது. அது எங்களிடம் அது இருந்தது. எங்கள் வாழ்வின் சிறந்த இரவு அது." என்றார்.


குழந்தைகள் :


லோபஸுக்கு முன்னாள் கணவர் மார்க் ஆண்டனியுடன் 14 வயது இரட்டையர்கள் எம்மே மற்றும் மேக்ஸ் உள்ளனர். அஃப்லெக்கிற்கு கார்னருடன் மூன்று குழந்தைகள் உள்ளனர் - வயலட், 16, செராபினா, 13, மற்றும் சாமுவேல், 10.