தன் காதலியுடன் Leonardo DiCaprio பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, லியானர்டோவிற்கு செல்லமாக மிரட்டல் விடுத்துள்ளார் அமேசான் நிறுவனர் jeff bezos .
அமெரிக்காவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பங்கேற்ற LACMA Art மற்றும் Film Gala நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் நடைப்பெற்றது. இதில் அமேசான் நிறுவனர் jeff bezos தனது காதலி Lauren sanchez உடன் பங்கேற்றார். அப்போது ஹாலிவுட் நடிகர் Leonardo DiCaprio ஐ சந்தித்த Lauren sanchez வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்களை போல பேசிக்கொண்டனர். அந்த காட்சி என்னவோ பார்ப்பவர்கள் Lauren sanchez , லியானர்டோவிடம் செல்லமாக அடம்பிடிப்பது போலவும் அதற்கு லியானர்டோ கண்டிப்பது போலவும்தான் இருக்கிறது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது வெறும் 6 நொடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. பலரும் Lauren sanchez மற்றும் நம்ம டைட்டானிக் ஹீரோ Leonardo DiCaprio இணைத்து கேளியாக பேச தொடங்கிவிட்டனர்.
இதனை அறிந்த அமேசான் நிறுவனரும் Lauren sanchez காதலருமான jeff bezos தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியானர்டோவை டேக் செய்து, “லியோ...இங்க கொஞ்சம் வாயேன்....உனக்கு ஒன்னு இருக்கு “ என கேப்ஷன் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் போர்ட் ஒன்றை வைத்துள்ளார் ஜெஃப், அதில் “இங்கு அபாயகரமான பள்ளத்தாக்கு உள்ளது .ஜாக்கிரதை” என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் வேடிக்கையாகவே இந்த வைரல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஜெஃப்.என்னதான் அவர் வேடிக்கையான இந்த பதிவை ஷேர் செய்திருந்தாலும் , நெட்டிசன்கள் அதையும் கிண்டல் செய்துதான் வருகின்றனர்.
ஜெஃப் மற்றும் லாரென் சான்செஸ் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். லாரென் சான்செஸ்ற்கு 51 வயதாகிறது. உலகின் இரண்டாவது பணக்காரர் என அழைக்கப்படும் ஜெஃப் தனது முதல் மனைவியை 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது