எடிட்டர் மோகன் மதுரையைச் சேர்ந்தவர். இவரது மனைவி வரலட்சுமி மோகன். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் மோகன் ராஜா, தமிழ் திரைப்பட இயக்குனர்; இளைய மகன் ஜெயம் ரவி, திரைப்பட நடிகர்; மகள் ரோஜா, பல் மருத்துவர். 


எடிட்டர் மோகன் தனது திரைப்பயணத்தை திரைப்படத் தொகுப்பாளராக தொடங்கினார். ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார். எடிட்டரில் இருந்து கதாசிரியர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என உருவெடுத்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் இவர் பணிபுரிந்து வந்தார். சொந்தமாக எம்எம் மூவி ஆர்ட்ஸ் மற்றும் எம்.எல் மூவிஸ் என்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களையும் வைத்திருக்கிறார். 


இன்று எடிட்டர் மோகன் தனது ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடுகிறார். ஐம்பதாவது திருமண நாளையொட்டி எடிட்டர் மோகன் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகணும் திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்து வந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






பெற்றோர்களின் திருமண நாள் சந்தோஷத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ஜெயம் ரவி, ''50 வருட திருமண வாழ்வு! திருத்தணி முருகன் கோவில் சென்று ஆசீர்வாதம் பெற்ற எனது பெற்றோர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.


பொன்னியின் செல்வன் 2:






நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக திரைப்படத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் மனதை மட்டும் அல்ல பாக்ஸ் ஆபீஸையும் வென்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் பாகம் 2, 2023 ஆம் ஆண்டு கோடை ரிலீசாக வெளியாகும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது திரைப்படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 28 நாள் வெளியாகும் என்று அறிவித்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷனே வெளியிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.