ஆர்த்தி ரவி


கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்தை அறிவித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. விவாகரத்து பற்றி ஜெயம் ரவி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்ததாக ஆர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் இடையிலான உறவே இந்த விவாகரத்திற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. 


மறுபக்கம்  மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயம் ரவியை பல்வேறு அடமானங்களுக்கு உட்படுத்தியதாகவும் திருமண வாழ்க்கை வெறுத்து போய் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து ஜெயம் ரவியும் ஒரு சில நேர்காணல்களில் பேசினார்.


இந்த சூழலில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன் சார்பில் விளக்கமளித்துள்ளார். "என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரப்பப்படும் அவதூறுகளை பார்த்து நான் அமைதியாக இருப்பது குற்றவுணர்வினால் இல்லை. இந்த விஷயத்தின் முடிந்த அளவிற்கு என்னுடைய தன்மானத்தை நான் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன். உண்மையை மறைக்க என்னை தவறாக சித்தரிக்கிறார்கள். சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். திருமணம் என்கிற பந்தத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் நான் புன்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம்" என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.