சமீபத்தில், ஜெயா தனது கணவரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது தன்னை வீடியோவை எடுத்த நபர் மீது கடுமையாக நடந்துக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகை ஜெயா பச்சன் தனது அனுமதியின்றி புகைப்படங்கள் எடுப்பதை விரும்புவதில்லை. நடிகரும் அரசியல்வாதியுமான ஜெயா பச்சன் பாப்பராசி மற்றும் ரசிகர்களிடம் கோபப்படும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. சமீபத்தில், ஜெயா தனது கணவரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெயாவின் சமீபத்திய வீடியோ ஒரு பாப்பராசியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஜெயா அமிதாப் பச்சனுக்கு முன்னால் விமான நிலையத்தில் நடந்து செல்லும் போது பூங்கொத்துகளுடன் வந்த ஒரு நபரை அவர் சந்தித்தார், அப்போது ஒரு ரசிகர் தனது வீடியோவை பதிவு செய்வதை அவர் கவனித்தார். இதனால், அவர் கோபமடைந்து அந்த நபரிடம், “தயவுசெய்து எனது படங்களை கிளிக் செய்ய வேண்டாம். உனக்கு ஆங்கிலம் புரியவில்லையா? என கோபமுடன் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, இன்ஸ்டாகிராம் பயனர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர், "ஓ ஹிட்லர் தீதி" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "நீங்கள் ஏன் அவரை படம் எடுக்கிறீர்கள். அவருக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம், அவர் அதற்கு தகுதியானவளர் அல்ல" என குறிப்பிட்டுள்ளார். வேறு ஒருவர், "நிஜமாகவே அவர் சின்ன விஷயத்திற்கு கூட இது போல் கோபத்துடன் கருத்து தெரிவிப்பார்” என பதிலளித்துள்ளார்.
ஜெயா பச்சன் தனது படங்களை எடுப்பவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்வார். ”வாட் தி ஹெல் நவ்யா” என்ற போட்காஸ்டுக்காக தனது பேத்தி நவ்யா நவேலி மற்றும் மகள் ஸ்வேதா பச்சனுடன் பேசிக் கொண்டிருந்த ஜெயா, புகைப்படக் கலைஞர்கள் தனது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும்போது அதை வெறுக்கிறேன் என்று கூறினார். "நான் அதை வெறுக்கிறேன். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தலையிட்டு அந்த பொருட்களை விற்று வயிற்றை நிரப்புபவர்களை நான் வெறுக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருக்கிறது. நான் எப்போதும் அவர்களிடம், உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கேட்டத்துண்டு” எனக் கூறினார்.