பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய்சேதுபதியிடம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் திரைப்படம் “ஜவான்”. இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி படக்குழு கேட்டுள்ளதாம். முன்னதாக பாகுபலி படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்த ராணா டகுபதியிடம் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு இருக்கிறார்கள்.
ஆனால் அவர் பிற படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க இயலாமல் போனதாம். இந்த நிலையில்தான் அந்த ஆஃபர் விஜய்சேதுபதியிடம் சென்றிருக்கிறது. முன்னதாக அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா 2 படத்திலும் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க கேட்டிருந்தார்கள்.
ஆனால், ஷூட்டிங் தேதிகள் ஒத்து வராத காரணத்தால் அதை அவர் மறுத்து விட்டாராம். இருப்பினும் அவர் சீனியர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.