Aani Thirumanjanam: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடந்த ஆனி திருமஞ்சன தேரோட்டம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Continues below advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

Continues below advertisement


கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் வளாகத்தின் உள்ளேயே விழா நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் குறைந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு  இன்று வெகு விமர்சையாக நடைபெற்ற தோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 


Tamil period: பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கை குறைப்பு.. எழுப்பப்படும் கேள்விகள்..

கடந்த மாதம் 27 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித் திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவில், தினந்தோறும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வீதி உலா நடைபெற்று வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை ஆயிரம் கால்  மண்டபத்திற்கு கொண்டு வந்த தீட்சிதர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். 


அதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட  சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து அருளினர். பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவாயா மந்திரம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் முன்பு சாலையில் பெண்கள் மாகோலம் இட்டும், சிவனடியார்கள் நடனமாடியும் வரவேற்று வரவேற்றனர்.


தொடர்ந்து தேர் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனித் திருமண திருவிழாவின் முக்கிய நிகழ்வான தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola