Priyamani: ஷாருக்கானுடன் இரண்டாவது படம்.. விஜய் சேதுபதிக்காக நடிச்சேன்... ஜவான் மேடையில் சீக்ரெட் உடைத்த பிரியாமணி!

இந்த ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டுள்ள பிரியா மணி மேடையில் தனது உரையை "என்ன மாமா சௌக்கியமா" என பருத்திவீரன் திரைப்படத்தின் டிரேட்மார்க் டயலாக்குடன் துவங்கினார்.

Continues below advertisement

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் - நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன்,  பிரியா மணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  

Continues below advertisement

சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்ததை தொடர்ந்து 'ஜவான்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

 


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அனிருத், பாடலாசிரியர் விவேக், பிரியாமணி, படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்டோர் தற்போது வருகை தந்துள்ளனர். 

இந்த ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டுள்ள பிரியா மணி மேடையில் தனது உரையை "என்ன மாமா சௌக்கியமா" என பருத்திவீரன் திரைப்படத்தின் டிரேட்மார்க் டயலாக்குடன் தான் துவங்கினார். "ஜவான்" படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அட்லீ சார் மற்றோன்று விஜய் சேதுபதி. நான் ராக் ஸ்டார் அனிருத்தின் மிக பெரிய ரசிகை.  அவரின் பாடல்களை போது கேட்டாலும் எனக்கு உடனே ஆட வேண்டும் என்ற ஆசை வரும். அது இப்போது நிறைவேறியுள்ளது. 

ஜெயிலர் திரைப்படத்தில் உங்கள் பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஜவான் திரைப்படமும் அதே போன்ற ஒரு ப்ளாஸ்ட்டாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதை தொடர்ந்து லியோ திரைப்படம் வரவுள்ளது. அது வேற லெவலில் இருக்க போகிறது" என அனிருத்தை புகழ்ந்து தள்ளினார். லியோ பெயரை பிரியா மணி சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. 

“தி மேன் ஷாருக்கான்! அவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தேன். மீண்டும் எனக்கு உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. உங்களை நான் அடிமனதில் இருந்து நேசிக்கிறேன், உங்கள் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி. உங்களால் தான் படத்தை ஒப்புக்கொண்டேன்" என்றார் பிரியா மணி. 

Continues below advertisement
Sponsored Links by Taboola