ஷாருக்கானையே தமிழில் பாட வைத்து விட்டார் இயக்குநர் அட்லீ என பாடலாசியர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். 


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதிபதி, யோகிபாபு என பலர் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வரும் 7ம் தேதி 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து அதிரடி காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக ஜவான் படத்தில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்களையும், வந்த எடம் உள்ளிட்ட பாடல்களும் டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 


படம் ரிலீஸ்க்கு ஒரு வாரமே உள்ளதால் சென்னையில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவுக்கு படக்குழு திட்டமிட்டது. இந்த நிலையில் இன்று நடந்த படத்தின் பிரீ ரிலீஸ் விழாவில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் அனிரூத், அட்லீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஷாருக்கானின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் கூட்டதால் நிகழ்ச்சி நடைபெறும் இடமே ஸ்தம்பித்தது. ரசிகர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய ஷாருக்கான் கையசைத்து விட்டு சென்றார். 


இந்த நிலையில் விழாவில் பேசிய பாடலாசியர் விவேக், ”ஷாருக்கான் ஒரு தமிழ் நடிகர். ஏனெனில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஹேராம் படத்தில் தமிழில் நடித்துள்ளார்.  அதனால் ஷாருக்கானை தமிழ் நடிகராக தான் பார்க்கிறேன். பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூயிஸை 2.8 பில்லியன் மக்களுக்கு தான் தெரியும். ஆனால், ஷாருக்கானை 3.2 பில்லியன் மக்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு ஷாருகான் நல்ல மனிதர். தமிழ் மீது அட்லீக்கு இருக்கும் காதல் வேற லெவல். படத்தில் நாங்கள் எல்லோருக்கும் சுதந்திரமாக வேலை பார்க்க வைத்தார். ’ஆள போறான் தமிழன்’ பாடலை பாலிவுட் கிங் ஷாருக்கானையே தமிழில் பாட வைத்துவிட்டார். 






இதேபோல் இசையில் அனிருத் ஒரு ராக் ஸ்டார். விக்ரம் படம் மற்றும் ஜெயிலரின் ஹுக்கும் பாடல்கள் அனிருத்தை யார் என காட்டுகிறது. இதுக்குமேலே லியோவில் தனது இசையால் அனிருத் தெறிவிக்க விட போகிறார். இனம் மொழி, கலாச்சாரம் என எல்லாத்தையும் தாண்டி  ஜவான் சாதனை படைக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு அனைவரது உழைப்பும் உள்ளது. அட்லீ கடின உழைப்பாளி. ஜவானில் குட்டி தமிழ் பாடல் உள்ளது” என புகழ்ந்து பேசியுள்ளார்.