ஒரு ப்ராஜெக்டில் தன்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஷாருக்கானின் ஆர்வத்தை பற்றி அறிந்ததும், தனது நீண்ட நாள் நண்பரான விஜய்யிடம் அதை அட்லீ தெரிவித்த போது, விஜய் கூறிய வார்த்தைகளை சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அட்லீ நினைவு கூர்ந்தார். 


 விஜய் கூறியதாக, அட்லீ தெரிவித்ததாவது..


“சீரியசாவே சொல்றியா அவர்( ஷாருக்கான்) உன்கிட்ட வந்தாரா? பிறகு என்ன தயக்கம். இதற்காக உன் வாழ்வை அர்ப்பணி” என்று விஜய் கூறியதாக அட்லி தெரிவித்தார். 


தன்னுடன் இணைந்து பணியாற்ற ஷாருக்கான் விருப்பம் தெரிவித்தபோது மற்ற இயக்குனர்களைப்போலவே தானும் அதை ஒரு அரிய வாய்ப்பாக கருதியதாக அட்லீ தெரிவித்தார். மேலும் அவருடன் இணைந்து பணியாற்ற, தான் உடனடியாக ஒப்புக்கொண்டதாக அட்லீ தெரிவித்தார். 


மேலும் ஒரு தனியார் ஊடகத்திற்கு அட்லீ அளித்த பேட்டியில், ஷாருக்கானை இயக்கும் செயல்முறை நுணுக்கங்களை அவர் எவ்வாறு அணுகினார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டார். ”நான் அவரை இயக்குவதற்கு முன் அவரை படித்தேன். எனவே நான் அவரின் ரசிகனானேன். ரசிகர்களின் துடிப்பையும் படித்தேன். 


சினிமா ரசிகன் என்பதை தாண்டி ஜவானை ஒரு ஆய்வறிக்கையாக படித்தால் கூட ஷாருக்கிடம் இருந்து ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அது ஜவானில் இருக்கும். கடந்த 30 ஆண்டுகளில் அவர் செய்யாததையும் ஜவானில் பார்க்கலாம். ஜவான் புதுமை நிறைந்ததாகவும் ரசிகர்களின் துடிப்புக்கு உத்திரவாதம் கொடுக்க கூடியதாகவும் இருக்கும்” என்று அட்லீ கூறினார்.


ஒரு ரசிகனாக ஒரு நட்சத்திரத்தை இயக்குவது எனக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. மிகவும் எளிமையானதே. நான் ஒரு ரசிகனாக இருந்தேன். ஆனால் கான் சாரை இயக்க மானிட்டர் முன் இருந்தபோது, நான் எப்போதும் ஒரு பேலன்ஸை வைத்திருந்தேன். அதன் முடிவையும் நாங்கள் கண்டோம். உலகில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஷாருக் சாரை விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். மீதம் உள்ளவர்களை கூட ஜவான் படம் மூலமாக ஷாருக்கின் ஃபேன்ஸ் கிளப்பில் கொண்டு வருவோம் என்றார் அட்லீ. 


ஜவான் படத்தின் வெற்றி குறித்து மனம் திறந்த அட்லீ, ”நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும், கடவுளுக்கும் ஆடியன்சுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் கூறினார். என்னால் இப்போது பொறுப்புகளைத்தான் பார்க்க முடியும். நான் வெற்றியை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை காட்டிலும் என்னுடன் பொறுப்பை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றேன் என்றார் அட்லீ. 


மேலும் படிக்க


Hotel Raid: ஓட்டல் ஓனர்களே ஜாக்கிரதை... வேட்டையாட வரும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்! சாப்பாடு தரம் ரொம்ப முக்கியம்!


Neet PG Cutoff: ஜீரோ மார்க் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம்... மத்திய அரசு திடீர் அறிவிப்பு!