நடிகர் ஷாருக்கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜவான் திரைப்படம் வசூலில் ரூ.1000 கோடியை கடந்து சாதனைப் படைத்துள்ளது.


ஜவான்


ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ’ஜவான்’ படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, சஞ்சய் தத், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களில் ஒருவராக திகழும் அட்லீ இயக்கியிருந்தார். இவர்கள் இருவருக்கும் இதுதான் பாலிவுட்டின் முதல் படமாகும். இந்த படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக திரையிரங்கங்கத்தில்  வெளியானது. 


தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அட்லீ ஸ்டைல் படங்களை ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்டப் படங்களில் பார்த்துவிட்டிருந்த காரணத்தினால் தமிழ் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது ஜவான் திரைப்படம். ஆனால் இவ்வளவுப் பெரிய வணிகத் திரைப்படத்தில் அரசியல் கருத்துக்களை கலந்துகட்டிய ஒரு படம் இந்தி சினிமா ரசிகர்களுக்கு புதிது என்பதால் இந்தப் படம் இந்தி ரசிகர்களிடம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் தன்னுடையப் எல்லா படங்களிலும் வைப்பது போல் சூப்பர் மாஸான காட்சிகள் ஷாருக் கானை புதிய கண்ணோட்டத்தில் ரசிகர்களை ரசிக்க வைத்தது.


1000 கோடி வசூல் 


ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜவான் திரைப்படம் வசூலில் ரூ.1000 கோடியை கடந்து சாதனைப் படைத்துள்ளதாக ரெட் சில்லி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக் கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் 27 நாட்களில் 1000 கோடி வசூல் ஈட்டியது. இதனைத் தொடர்ந்து  ஜவான் திரைப்படம் வெறும் 17 நாட்களில் 1000 கோடி இலக்கை எட்டியுள்ளது. ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்பது பாலிவுட் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் ஷாருக் கான் நடித்திருக்கும் டங்கி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்கும் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுமந்துள்ளது.  ஷாருக்கான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த மகிழ்ச்சிகரமான தகவலைக்  கொண்டாடி வருகின்றனர்.