இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் படங்கள் இயக்கிவந்த நிலையில் இப்போது பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது.


ஜவான் டீசர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, ட்ரெய்லர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் ப்ரீ தியேட்டர் ரிலீஸ் மட்டும் 250 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.


தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான தெறி, மெர்சல், உள்ளிட்ட திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார் அட்லி. பாலிவுட்டில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அமைந்துள்ளது. 


ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். 500 கோடி பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ஜவான், பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ-தியேட்டர் ரிலீஸ் பிஸினஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் ஆகிய அனைத்தும் சேர்ந்து 250 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாம். இதுதவிர தமிழ், தெலுங்கு தியேட்டர் ரைட்ஸும் பல கோடிகளுக்கு சேல்ஸ் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ் தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாகவும்  தெலுங்கு தியேட்டர் ரைட்ஸை தில் ராஜூ வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ள அட்லீ, டீசர், ட்ரெய்லர் இரண்டையும் ரெடி செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதில் டீசர் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ட்ரெய்லர் அப்டேட்டையும் விரைவில் வெளியிட  அட்லீ திட்டமிட்டுள்ளாராம். இதனால் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் வெயிட்டிங்கில் உள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ள ஜவான், அட்லீக்கு பாலிவுட்டில் பெரிய ஓபனிங் கொடுக்கும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே ஜவான் திரைப்படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் செப்டம்பர் 7-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.


மேலும் படிக்க 


Rahul Gandhi Defamation Case: காங்கிரஸ் தலையில் இடி..! ராகுல் காந்தி மனு மீண்டும் தள்ளுபடி - குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி


PM Modi Visit: 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!