நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய் இப்போது தன்னால் கலந்து கொள்ள முடியாத பொது நிகழ்ச்சிகளில் தனது குடும்பத்தினை பங்கேற்க செய்கிறார். இதற்கு முன்னதாக சங்கீதா பொதுவெளியில் தோன்றிய நிலையில் இப்போது அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் முதல் முறையாக பொது நிகச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஹா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, ரெபே மோனிகா ஜான், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட், செகண்ட் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் இருக்கும் நிலையில் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு நடிகரையும் தாண்டி அரசியல் கட்சி தலைவரான விஜய் தன்னால் கலந்து கொள்ள முடியாத நிகழ்ச்சிகளுக்கு தனது குடும்பத்தினரை கலந்து கொள்ள செய்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படியொரு ஒரு நிகழ்ச்சியான பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் சேதுபதில் ஜேசன் சஞ்சய், முதல்வர் முக ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் உள்பட பலரும் ஒரே விமானத்தில் வருகை தந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்குவதால், அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தமிழ் குமரன் அழைப்பின் காரணமாக இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.