லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் டிசம்பர் 23, 2025 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

Continues below advertisement

சிக்மா படப்பிடிப்பு நிறைவு 

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. படமாக்குவது குறித்து ஜேசன் சஞ்சயின் தெளிவும், திட்டமிட்டபடி முழு படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்துள்ளதுள்ளதும் இயக்குநராக அவரது திறமையை காட்டுகிறது. படப்பிடிப்பை முதலில் 80 நாட்கள் திட்டமிட்டோம். ஆனால், எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உட்பட முழு படப்பிடிப்பையும் படக்குழுவினர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே முடித்தனர். ஒரு படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே, எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இது பாசிட்டிவான விஷயம்தான். டிசம்பர் 23 அன்று ’சிக்மா’வின் டீசரை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் raw visual footage-ஐ நானும் சுபாஸ்கரன் அண்ணாவும் பார்த்தோம். இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் தொழில்நுட்பக் குழு தங்கள் முழு உழைப்பையும் கொடுத்து மாயாஜாலம் செய்துள்ளனர்” என்றார். 

இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறுகையில், “லைகா புரொடக்ஷன்ஸ் போன்ற ஒரு மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாகவது உண்மையிலேயே பாக்கியமாகக் கருதுகிறேன். கதைக்கு என்ன தேவையோ அதை தயாரிப்பாளர்களாக எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செய்து கொடுத்து படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய கிரியேட்டிவ் புராசெஸில் முழு நம்பிக்கை வைத்து எந்த குறுக்கீடும் அவர்கள் செய்யாததால் படப்பிடிப்பை திட்டமிட்ட 80 நாட்கள் ஷெட்யூலுக்கு முன்பாகவே முடித்தோம். ’சிக்மா’ பட நடிகர்கள் மற்றும் குழுவினரின் அற்புதமான முயற்சிக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. டிசம்பர் 23 அன்று ’சிக்மா’வின் டீசரை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பார்வையாளர்களுக்கு ரிச்சான விஷூவல் அனுபவம் இந்தப் படத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். படம் நல்லபடியாக நிறைவடைய ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார், தமிழ் குமரன் சார் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி” என்றார். 

Continues below advertisement

*நடிகர்கள்:* பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

*தொழில்நுட்பக்குழு விவரம்:* 

தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பு: சுபாஸ்கரன்,லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி: ஜி.கே.எம். தமிழ் குமரன்,இசையமைப்பாளர்: தமன் எஸ், ஒளிப்பதிவாளர்: கிருஷ்ணன் வசந்த், எடிட்டர்: பிரவீன் கேஎல்,விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: ஹரிஹரசுதன், இணை இயக்குநர்: சஞ்சீவ், மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா