ஸ்ரீதேவி மகள்:


பிரபல நடிகையும் ஸ்ரீதேவி - போனி கபூர் மகளுமான ஜான்வி கபூர் தனது முன்னாள் காதலருடன் மீண்டும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தன் தாய் ஸ்ரீதேவியை துரதிஷ்டவசமாக முறையில் 2018ஆம் ஆண்டு பறிகொடுத்த ஜான்வி கபூர் அதே ஆண்டே பாலிவுட்டில் தடக் படம் மூலம் அறிமுகமானார்.


இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவரான தன் தாயின் இழப்பு மற்றும் வழிகாட்டுதலின்றி பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி தொடக்கத்தில் தன் தோற்றம், ஸ்ரீதேவி உடனான ஒப்பீடுகளால் பெரும் விமர்சனங்களுக்கு ஆளானார்.


பிரபலம்:


ஆனால் தன் தனித்துவமான  தோற்றம் உடல்வாகு ஆகியவற்றை சிறப்பாகக் கையாண்டு பாலிவுட்டின் ஹாட் செலிப்ரேட்டிகளில் ஒருவராக இந்த 4 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளார் ஜான்வி. இதுவரை வெறும் ஆறே படங்களில் நடித்துள்ள ஜான்வியின் பவால், மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.


தனிப்பட்ட வாழ்வில் ஜான்வி கபூர் ‘தடக்’ படத்தில் நடித்த தனது முதல் கோ ஸ்டாரான இஷான் கட்டார் தொடங்கி தற்போது பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான கார்த்திக் ஆர்யன் வரை பலருடனும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.


முன்னாள் காதலர்


இந்நிலையில் ஜான்வி தற்போது தனது முன்னாள் காதலரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரின் பேரனுமான ஷிகார் பஹாரியாவுடன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவரான சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் வழிப்பேரனான ஷிகார் பஹாரியாவை ஜான்வி கபூர் பாலிவுட்டில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.




இருவரும் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் இருவரும் ஊர் சுற்றி மகிழும் ஏகப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.


தொடர்ந்து பாலிவுட்டில் நுழைந்த பின் இருவருக்கும் ப்ரேக் அப் ஆன நிலையில், ஜான்வி சக நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.


இந்நிலையில், தற்போது ஷிகார் பஹாரியாவுடன் ஜான்வி பொது இடங்களில் வலம் வரும் வீடியோக்கள் மீண்டும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


 






இந்நிலையில் பிரிந்த காதல் பறவைகள் மீண்டும் இணைந்ததாகக் கூறி ஜான்விக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.