மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் முன்னணி கதாபாத்திரங்களை தேர்வு செய்து, கதையின் நாயகியாக கலக்கி வருகிறார். சமீீபத்தில் கோலமாவு கோகிலா படத்தில் இந்தி ரீமேக்கில் இவர் நடித்துள்ள படம் வெளியாகியுள்ளது. 



நடிகர் ராஜ்குமார் ராவ் தற்போது மும்மையில் உள்ள அபார்ட்மெண்டை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.44 கோடியாகும்.இதற்கு முன்பு  இந்த அபார்ட்மெண்டை பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த வீட்டை ஜான்வி கபூர் 39 கோடி  கொடுத்து வாங்கியுள்ளார்.பாலிவுட் நடிகர் ராஜ்குமார் மற்றும் அவர் மனைவியாகிய  நடிகை பத்ரலேக்கா ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வீட்டை ரூ.43.87 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.


இவர்கள் மொத்தம் 3 தளங்களை வாங்கியுள்ளனர். 14, 15 , 16 ஆகிய மூன்று தளங்கள் சுமார் 3,456 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.இதில் மொத்தம் 6  பார்க்கிங் உள்ளது.இந்த வீட்டை வாங்குவதற்கு தொடர்பான பேச்சு வார்த்தை இந்த ஆண்டின் மார்ச் மாதமே நிறைவடைந்துள்ளது. பாலிவுட் ஜோடிகள் இருவரும் ரூ.2.19 கோடியை ஸ்டாம் ட்யூட்டிக்காக செலவளித்துள்ளனர். ஆனால் 2020 ஆம் ஆண்டில் நடிகை ஜான்வி கபூர்  78 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.இதே கட்டிடத்தில் கடந்த ஆண்டு நடிகை கஜோல் இரு ப்ளாட்களை 11.59 கோடி கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமா உலகில் கலக்கிவருகிறார் அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவிலும் இவருக்கு தீவர ரசிகர் கூட்டம் உள்ளது. பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் நடிகர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அதுபோக அஜித்தின் 61-வது படத்தையும் இவர்தான் தயாரித்து வருகிறார். கோடியில் புரளும் தயாரிப்பாளரின் செல்வ மகள் நடிகை ஜான்வி கபூர் 4 ரூபாய் கோடி லாபத்திற்கு இந்த வீட்டை விற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காரணம் நம்பும் வகையில் இல்லை அதனால் வீட்டை விற்றத்தில் ஏதோ விவகாரம் உள்ளதாக ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .


இது ஒருபுறம் இருக்க, எந்த கவலையும் இல்லாமல் இன்ஸ்டாவில் கூல் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர். இதோ அவற்றில் சில..


 














 


 


இப்படி பல ஜாலியாக பதிவுகள் போட்டு வரும் நிலையில், அவருக்கு என்ன கவலை இருக்க கூடும் என்றும், பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண