சீர்காழி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பெயர் பலகை அகற்றிய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த 24 வார்டுகளிலும் உள்ள தெருக்களின் பெயர்கள் நகராட்சி சார்பில், பெயர் பலகையாக தெருக்களின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீர்காழி நகராட்சி உட்பட்ட காட்டுநாயக்கன் தெரு சீர்காழி சட்டநாதபுர ஊராட்சிக்கு உட்பட்டது என்றும், தெருவின் முகப்பு பகுதி மட்டுமே சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டு எனவும், அதனால் சீர்காழி நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையினை நகராட்சி நிர்வாகம் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது.  




இந்நிலையில், காட்டுநாயக்கன் தெருவில் சீர்காழி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களே பெருமளவு வசித்து வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் தங்கள் பகுதி பெயர் பலகையை அகற்றப்பட்டது குறித்தும், அதனை மீண்டும் அதேஇடத்தில் வைக்கக் கோரி கடந்த 10 தினங்களாக சீர்காழி நகராட்சி ஆணையர் ராஜகோபாலுக்கு (பொறுப்பு) கோரிக்கை வைத்துள்ளனர்.





ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்காத நகராட்சி ஆணையர் மீண்டும் பெயர் பலகையை வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி தூய்மை பணியாளர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்றப்பட்ட பெயர்களையே மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என கோரி  தங்கள் குடியிருப்பு முகப்பு பகுதி சாலையில் அமர்ந்து பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்து வந்த எங்கள் பகுதி பெயர் பலகையை நகராட்சி ஆணையர் உள்நோக்கத்துடன் அகற்றியதாகவும், அவ்வாறு அகற்றிய ஆணையர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் பெயர் பலகையை அதே இடத்தில் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.




தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை அடுத்து சீர்காழி நகர் பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அல்ல படாமல் தேங்கி துர்நாற்றம் வீச தொடங்கியதை அடுத்து, நகராட்சி சார்பில் தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் அதே இடத்தில் பெயர் பலகையை அமைத்தனர்.  அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கள் பகுதியில் குப்பை தரம் பிடிக்கும் மையம் அமைந்துள்ளதாகவும், அதனை முறையாக பராமரிக்காமல் தங்கள் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனையும் சரி செய்து தர வேண்டும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அப்போது அவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண