கார்த்தி - தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான பையா படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி இயக்க உள்ளார் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வைரலாக பகிரப்பட்டது. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு பதிலாக நடிகர் ஆர்யாவும் தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் காட்டுத்தீ போல பரவின. 


 



 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி - தமன்னா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2010ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'பையா' .  


13 ஆண்டுகளுக்கு பிறகு பார்ட் 2 :
 
தற்போது பார்ட் 2 படங்கள் வெளியாவது ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி, சிம்பிள் கதையாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அமோகமான  வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாவது பாகத்தை 13 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்க முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா மற்றும் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட தகவலின் எதிரொலியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எந்த தமிழ் திரைப்படத்திலும் நடிக்க இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. 


 






போனி கபூர் கொடுத்த விளக்கம் :


அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர். எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்புதல் அளிக்கவில்லை அதனால் தயவு செய்து யாரும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் ஜான்வி தந்தை போனி கபூர். 


 






 


இருப்பினும் பையா 2 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள். 


மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவரின் மகள் ஜான்வி கபூர், பையா 2 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் தனது அம்மாவை போலவே அவரும் ஒரு பெரிய ஸ்டாராக தமிழ் சினிமாவை கலக்குவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.