ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் விஜய் படத்துக்கு போட்டியாக தன்னுடைய படம் வெளியாவது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .
ஜனநாயகன் Vs பராசக்தி
ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கைக்கு விடைகொடுத்து அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் விஜய். தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தை எந்த நடிகர் பிடிக்கப் போகிறார் என்கிற விவாதம் ரசிகர்களிடையே தொடர்ச்சியாக இருந்து வருகிறது. தி கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுக்கும் காட்சிக்குப் பின் அடுத்த இளைய தளபதி சிவகார்த்திகேயன் தான் என பலரும் பேசி வருகிறார்கள். அதேபோல் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகப்பெரிய கமர்சியல் மார்கெட் சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது . விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு தங்களது ஆதரவை கொடுத்து வந்தனர். ஆனால் பராசக்தி படத்தின்
2026 பொங்கலுக்கு ஜனவரி 9 ஆம் தேதி விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் ஜனவரி 10 ஆம் தேதிக்கு அண்மையில் மாற்றப்பட்டது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை வெளியிடுவது தயாரிப்பாளர்களின் முடிவு என்றாலும் சிவகார்த்திகேயனை விமர்சித்து சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் படத்துடன் போட்டிபோட எனக்கு தகுதி கிடையாது
இப்படியான சூழலில் சிவகார்த்திகேயனின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விஜய் படத்துக்கு போட்டியாக தனது படம் வெளியாவது குறித்து சிவா விளக்கமாக பேசியுள்ளார் . சிவகார்த்திகேயன் நாயகனாக வளர்ந்து வந்த காலத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர் " விஜய் சார் படங்களுடன் போட்டி போட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஒரு சதவிதம் கூட கிடையாது. ஏனால் அவர்கள் எல்லம் பெரிய ஸ்டார்ஸ். எனக்கு ஒரு நல்ல ரிலீஸ் டேட் நல்ல விடுமுறை நாள் கிடைத்தால் போதும் . அப்படி இருக்கையில் வேண்டுமானால் ஒரே நாளில் படங்கள் வெளியாகலாம். அதுவும் தயாரிப்பாளரின் முடிவு . ஒரு சிலர் அதை தவறாக நினைத்துக்கொள்ளலாம். விஜய் சாருடன் போட்டி போட வேண்டும் என்கிற தகுதியும் , எண்ணமும் , நம்பிக்கையும் எனக்கில்லை" என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்