பிக் பாஸ் தமிழ் சீசன் 8:
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் இடம் பெற்றார்கள். இதில் ஆண்கள் vs பெண்கள் என்று இரு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாட்டை விளையாடி வந்தனர். ஆனாலும் ஆட்டம் சூடு பிடிக்கவில்லை. இதன் காரணமாக வைல்டு கார்டு மூலமாக புதுசாக 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார் பிக்பாஸ்.
இதுவரையில் ரவீந்திர் சந்திரசேகர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி, சிவக்குமார், ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அருண், அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவிதா, ராணவ், ராயன், சவுந்தர்யா, விஷால் ஆகியோர் உள்ளனர். இந்த வாரம் ஜெஃப்ரி அல்லது மஞ்சரி வெளியேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
ஜேம்ஸ் வசந்தன்:
இந்த நிலையில் தான், பிக் பாஸ் குறித்து இசையமைப்பாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம் ஒன்றை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முத்துக்குமரன் தன்னுடைய விளையாட்டை விட்டுக் கொடுத்து விளையாடும் போது நீங்கள் யார் அதனை தடுப்பதற்கு, அவருடைய விளையாட்டை அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாட பிக் பாஸ் வீட்டில் உரிமை இல்லையா? பிக் பாஸ் வீட்டில் பலரும் இது என்னோட ஸ்ட்ரேடெஜி என்று சொல்லும் போது ஏன் அந்த ஸ்ட்ரேடெஜி முத்துக்குமரனுக்கு மட்டும் இல்லையா? இந்த வீட்டிற்குள் இப்போது பிக் பாஸ் தவறு செய்து விட்டதாக கூறி உள்ளார்.
விளையாடுவது சரியோ தவறோ அது வேறு, ஆனால், விட்டுக்கொடுத்து விளையாடுவது என்பது என்னுடைய உரிமை என்று முத்துக்குமரன் சொல்வதில் என்ன தவறு. இந்த வாரத்திற்கான கேப்டன் எனக்கு தேவையில்லை என்று அவர் விட்டுக் கொடுத்து விளையாடுவது அவருடைய உரிமை. இதை யாருமே ஒன்றும் சொல்ல முடியாது. இந்த முறை சக போட்டியாளர்களால் அவர் நாமினேட் செய்யப்பட வேண்டும், பார்வையாளர்களால் அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பது அவருடைய ஸ்ட்ரேடெஜி என்று அவருக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன் களமிறங்கியுள்ளார்.
முத்துக்குமரன்:
பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய பேச்சுத்திறமையால் இத்தனை நாட்களாக தொடர்ந்து தாக்குப்பிடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர் முத்துக்குமரன். இந்த முறை பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவதற்கான எல்லா தகுதியும் இருக்கும் போட்டியாளராகவே பார்க்கப்படுகிறார். எனினும், இறுதியில் பிக் பாஸ் டுவிஸ்ட் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இறுதி வரை என்னதான் நடக்கிறது என்பதை வெயிட் பண்ணியே தெரிந்து கொள்வோம்.