ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும், இணைந்துள்ள படம் ’ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
முன்னதாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராகக் கொண்டாடப்படும் நடிகர் மோகன்லால் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வத் தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக தமன்னா இணையும் நிலையில், இந்த அப்டேட் தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சுடச்சுட பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகஅமைந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
இதுவரை ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது.
இதில் ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஜெயிலர் படமானது வரும் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.