ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜி.கே வாசன் கடந்த முறை தமாகா போட்டியிட்டது. இம்முறை கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், “ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிறோம். நேற்று ஈரொடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். அதிமுகாவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் த.மா.க அலுவலகத்திற்கு வருகை தந்து தேர்தல் வியூகங்கள் மற்றும் யுக்திகள் குறித்து பேசப்பட்டது" என கூறினார்.
மேலும், “கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடியை சந்தித்ததாக கூறினார். அதிமுக-தமாகா-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத அரசாக திமுக உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக செயல்பட்டு வருகிறது. இவையெல்லாம் எங்கள் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. கலந்து ஆலோசனை செய்து யார் போட்டியிடுவார் என்ற முடிவு வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.