நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் நிலையில், கோலிவுட் வட்டாரமே ஜெயிலர் ஃபீவரில் திளைத்து வருகிறது.


என்றென்றும் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடித் தீர்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பட ரிலீசை ஒட்டி உச்ச நடிகரோடு மோத விரும்பாமல் வேறு திரைப்படங்கள் பெரிதாக வெளியாகாத நிலையில், ஒன் மேன் ஷோவாக ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் கால் பதிக்க உள்ளது.


இதையும் படிங்க..


Jailed Pakistan PMs: திரும்பிய வரலாறு..பெனாசிர் பூட்டோ முதல் இம்ரான் கான் வரை..கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் கதை


சன் பிக்சர்ஸ் தயாரிக்க,  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், இப்படத்தில் மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் சென்ற வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. 


தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. ஏற்கெனவே காவாலா, ஹூக்கும் பாடல்கள் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வரும் நிலையில், ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு ஜெயிலர் படத்தின் புக்கிங்  தொடங்க உள்ளதாக கமலா திரையரங்கம் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.


விரைவில் நேரம் பற்றிய தலவலை வெளியிடுவதாகவும், முத்துவேல் பாண்டியனைக் காண தயாராக இருங்கள் என்றும் கமலா சினிமாஸ் தரப்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.


ஜெயிலர் முதல் காட்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்க உள்ளதாகவும், டிக்கெட் புக்கிங் தொடங்கி அரை மணி நேரத்தில் 4 நாள்களுக்கான ப்ரீபுக்கிங் முடிந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் ட்வீட் செய்துள்ளது.


 






பிற மொழி சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் தொடங்கி, நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர்.


இன்று காலை ஜெயிலர் படத்தில் மோகன்லால் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நாளை ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.