பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்த சீன மக்கள் கண் கலங்கினர்.
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்திலும், நடிகர் சூர்யா நடிப்பிலும் தயாரிப்பிலும் `ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
சூர்யா, லிஜமோல் ஜோஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோர் ஜெய் பீம் படத்தில் நடிப்பின் உச்சக்கட்டத்தை வெளிப்படித்தி படத்தை பார்த்த மக்களை கண் கலங்க செய்தனர். இப்படம் வெறும் எமோஷன்களை வெளிப்படுத்துவோடு நிறுத்திக்கொள்ளாமல் நாட்டில் நடந்த உண்மையான சம்பவத்தையும் சித்தரித்தது. அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒழிவு மறைவுமின்றி மக்களிடம் எடுத்து வைத்தது. இந்தப் படம் ஐஎம்டியில் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு சர்வதேச சாதனைகளை படம் படைத்தது.
தற்போது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இப்படம் பெய்ஜீங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படமானது திரையிடப்பட்டுள்ளது.ஜெய்பீம் பார்த்த பின் உங்கள் உணர்வு என்ன என்று கேட்ட கேள்விக்கு “கண்ணீருடன் பார்த்தேன், மனம் நெகிழ்ந்து விட்டேன், கதை மன வலியை ஏற்படுத்தியது” என்று பதில் கூறியிருந்தனர்.