ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று ஜிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. 


 இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முதல் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார். 






இந்நிலையில், ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் விக்கெட்டை சிராஜ் தனது 9 வது ஓவரில் கைப்பற்றினார். தொடக்க வீரராக களமிறங்கிய தகுட்ஸ்வானாஷே கைடானோ தொடக்கம் முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வர, இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிராஜ் தான் வீசிய 9 வது ஓவரில் இன் ஸ்விங்காக வீசினார். அதை எதிர்கொண்ட தகுட்ஸ்வானாஷே கைடானோ அடிக்க முயன்று அவுட் சைடு எட்ஜாக மாறியது. அதை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் லாபகமாக தாவி பிடித்து அசத்தினார். 


இதன் தொடர்ச்சியாக ஜிம்பாவே அணி அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். அதன் பிறகு ஜிம்பாவே அணியை மீட்க சீன் வில்லியம்ஸ் மற்றும் ரியான் பர்ல் களமிறங்குகினர். இவர்களின் பார்ட்னர் ஷிப்பில் ஜிம்பாவே அணி எப்படியாவது 200 ரன்களை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்ஸ் 42 பந்துகளில் 42 ரன்கள் அடித்து தீபக் ஹூடா பந்து வீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்தார். 


தொடர்ந்து பின் வரிசை வீரர்கள் மீதமுள்ள விக்கெட்டை பறிகொடுக்க, 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரியான் பர்ல் மட்டும் 39 ரன்களுடன் அவுட்டாகமல் கடைசி வரை களத்தில் இருந்தார். 






இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களும், சிராஜ், பிரசித், அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.