ட்விட்டர் ஸ்பேசஸ் மூலம் ஜகமே தந்திரம் படக்குழு இன்று இரவு உரையாடினார்கள். படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் தகவல்கள் பலவற்றை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். ஓடிடிக்காக பாடல்கள் எதும் நீக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்,


''ஆமா. திரையரங்கில் இண்டர்வெல் இருக்கும். அதனால் இடைவேளை முடிந்து ஒரு பாடம் வைக்கலாம். ஆனால் ஓடிடியில் இண்டர்வெல் இருக்காது. இது மாதிரியான சில சிக்கலால் 3 பாடல் இருக்காது. ஆனால் கண்டிப்பாக ரகிட பாடல் இருக்கும். இதற்கு இசையமைப்பாளர் சரியென்றே சொன்னார். இரண்டு மாதங்கள் கழித்து விஜய் டிவியில் படம் வரும். அப்போது 8 பாடலும் வரும்'' என்றார். ஓடிடிக்கு பிறகும் தியேட்டரில் வெளியாகுமா?  என்ற கேள்விக்கு ''இருக்கலாம். தயாரிப்பாளர்கள் தயார் என்றால் நடக்கலாம். தியேட்டரில் பார்க்க எல்லாருக்கும் விருப்பம்தான். இந்த ஓடிடி  ரிலீஸ் என்பதே நமக்கு புதிதுதான். அதுபோல எதுவேண்டுமானாலும் நடக்கலாம்'' என்றார்.




பின்னர் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ''இந்த படத்தை சுற்றி பல சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன. ஓடிடி வெளியீடு என்பதே புதிய அனுபவம் என்றார். கொரோனா காலம் குறித்து பேசிய அவர், இந்த பேரிடர் காலத்தில் நாம் இருக்கிறோம். பல இறப்புக்களை நாம் சந்திக்கிறோம். நாம் நேர்மறையாக இருக்க வேண்டும். கொரோனாவில் அஜாக்கிரதை வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும்''  என்றார்.


கேன்சர் என் வாழ்க்கையின் போக்கை முடிவுசெய்ய விடமாட்டேன் – சோனாலி பெந்த்ரே


உங்களின் பாடல்கள் சாமானியர்களுக்கானதாகவே இருக்கிறது. அது தேடி போனதா? அது உங்களை தேடி வருகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சந்தோஷ்,


"பொருளாதார சிக்கலில் இருந்தேன். அதை சுற்றியே என்னுடைய பிரச்னை இருந்தது. அப்படியான பயணத்தில் ரஞ்சித்தை சந்தித்தேன். கானா பாடகர்களை சந்தித்தேன். பின்னர் என்னுடைய பிரச்னை எதுவும் பிரச்னையாக இருக்கவில்லை. அந்த நேரத்தில் நடந்த ஈழப்பிரச்னை எல்லாம் என்னை நொறுக்கியது. அப்படியெல்லாம் இருந்து வந்ததால் இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் பயணிக்கிறேன். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.அதுதான் முக்கிய குறிக்கோள் என்றார். பின்னர் ஸ்பேசஸில் பேசிய தனுஷ், படம் குறித்தும், பாடல்கள் குறித்தும் கலந்துரையாடினார். பாடல் பாடியும் ரசிகர்களை குஷிப்படுத்திய தனுஷ் தனக்கு இசையமைப்பாளராகும் திட்டமில்லை" என்று தெரிவித்தார்





2020-ஆம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. இறுதியில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!